3/16/13

7

ஒளியூறிய நீர்ப்பரப்பின் மேல் தோன்றுகின்ற சிற்றலைகள்.

|

ஆழியாழம் அமிழ்ந்தும்
கட்டற்றுத் தெறித்துச்
சுழலும் புவித்திசைக்கு
எதிர்ப்பயணம் மேற்கொள்ள,
எங்கிருந்துதான் எண்ண‌ங்களை
இழுத்துச் செல்கின்றன‌
மறைகின்ற கதிரின்
மெல்லிய மஞ்சள் விரவிய‌
ஒளியூறிய நீர்ப்பரப்பின் மேல்
தோன்றுகின்ற சிற்றலைகள்...?
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3/8/13

15

கேட்கலாமா கேர்ள்ஸ் சின்னதா சில டவுட்ஸ்..?

|


பொய்சொன்னாக் கண்டு பிடிச்சுடுவீங்க.....அதே நேரத்துல உண்மையையும் சொல்ல முடியாது...நம்ப மாட்டீங்க ...கரெக்டா..?

ஒரு மணி நேரமாமேக்கப் போடுவீங்க...ஆனா  ஒரு நிமிடம் ரசிச்சுப் பாத்தா முறச்சுப் பாப்பீங்கதானே..?

உங்களுக்கேத்த ட்ரெஸ்ஸ இதுவரைக்கும் யாரும் தயாரிக்காத மாதிரியே கடைகள்ல தேடுவீங்க....உங்களுக்கேத்த  மாப்பிள்ளையும் இதுவரைக்கும் பொறக்காத மாதிரியே மெதப்பீங்கதானே.....?

பத்துப் பேர் கூட இல்லாத பப்ளிக் ப்ளேஸ்ல பத்து லட்சம் பேர் உங்களையே பார்க்கற மாதிரி ஒரு தன்னுணர்வோட நடப்பீங்கதானே...?

அரியர்ஸ் க்ளியர் பண்ண ட்யூஷன் போனாலும் எக்சஸ்ட்ராவா நாலு language கத்துக்க க்ளாஸ்க்குப் போற மாதிரியே பில்டப் பண்ணுவீங்கதானே...?

இந்த நெயில் பாலீஷும் லிப்ஸ்டிக்கும் இருக்கே...ஆயிரம் ஷேட்ஸ்ல இருந்துசூஸ் பண்னினாலும் மறுநாளே போரடிச்சுப் பழசா ஃபீல் பண்ணுவீங்கதானே..?

அஞ்சாந்தேதி அஞ்சுமனிக்கு வந்து மீட் பண்றதா அஞ்சுநாளைக்கு முன்னாலேயே முடிவுபன்ணியிருந்தாலும் அதச்சொல்லாம பிஸியா இருக்கற மாதிரியே நாலாந்தேதி நாலு மணி வரைக்கும் சீனப்போடுவீங்கதானே...?

...ஜூட் வுடறதுக்கு முன்னால ஒரு முக்கியமான மேட்டரு..WISH U A HAPPY WOMEN'S DAY FOR ALL ...வர்ட்டா...?

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3/6/13

4

சிறுசலன‌ங்களை மீட்டெடுக்கும் முயற்சி

|

பகிர்தலின்
பேரின்பத்தைப்
புரிதல் யாருக்கும் 
வாய்க்கவில்லை!
வெளிப்படுத்தலுக்காகவே
ஏங்கிக்கிடக்கும்
சிறுசலன‌ங்களை
மீட்டெடுக்கும் முயற்சியில்
விடாமல் தொடர்வதற்கான‌
காரனத்தை
அறுதியிட இயலவில்லை!
ஆனாலும்
நிகழ்ந்து முடிந்ததை
மீட்டுருவாக்கத் துடித்தே
மாய்கின்றன‌
உறக்கம் தொலைந்த இரவுகள்!

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

10/29/12

10

கிறுக்கு முற்றியது

|


கிறுக்கு முற்றியது

                     (தாழிசை)

கண்ணழகுக்கு இவ்வுலகில்

       என்னவிலையும் கொடுக்கலாம்;
கண்ணசைவுக் கட்டளையில்
      காலன்கூட மயங்கலாம்!


உதிர்க்கும் வார்த்தை ஒன்றுக்காக‌

      உலகத்தையே துறக்கலாம்;
உதட்டு வார்த்தை உத்தரவில்
     சொர்க்கம்கூடத் திறக்கலாம்!

பக்குவமாய்ப் படைத்தசாமிக்குப்

      படையல் ஒன்று போடலாம்;
முக்தியடைய அடுத்த பிறவியிலுன்
     முகப்பருவாய்ப் பிறக்கலாம்!


என்னவளே உன்னழகை

      என்ணியெண்ணி வியக்கலாம்;
கன்னியுன்றன் முகத்தைகாட்டிக்
      கல்லைக்கூட மயக்கலாம்!


கன்ணேஉன் கனிமொழியைக்

     காலம்முழுதும் கேட்கலாம்;
புண்ணியமாய்ப் போகுமொரு
     புன்னகை செய் தேவலாம்!


கண்மணியின் காலடியில்

     காலம் முழுதும் கிடக்கலாம்; - உன்
கால்கள்பட்ட இடத்திலெனக்குக்
     கல்லறையே கட்டலாம்!


உன்விழியின் ஒளியதனை

     உலகுமுழுதும் பரப்பலாம்;
இரவுபகல் வேறுபாடே
    இல்லையென்று சொல்லலாம்!


கூந்தலிழை ஒன்றுபோதும்

     குவலயத்தை ஆளலாம்;
ஏந்திழையின் எண்ணங்களை
     எழுத்துவடிவில் தீட்டலாம்!


பாதம் துடைக்க வானிலிருந்து
     மேகத்துணி கிழிக்கலாம்;
பாதம் அழகா? மேகம் அழகா?
     பட்டிமன்றம் வைக்கலாம்!


தலையில் தவழ நிலவும்கூடத்

     தாவிக்குதிக்கப் பார்க்கலாம்;
தவறிவிழுந்த தலைமுடியைத்
     தத்தெடுத்து வளர்க்கலாம்!


கைதவறித் தரையில் விழுந்த

     கைக்குட்டையை எடுக்கலாம்;
காதலுலகின் சின்னமதைக்
     கம்பத்திலே ஏற்றலாம்!


கூந்தல்கண்ட பூவெடுத்துக்

     கொஞ்சிக்கதை பேசலாம்;
தேனில்நனைத்து ஊறவைத்துத்
    திவ்வியமாய்ப் புசிக்கலாம்!
 பூவிதழில் தேந்தடவிப்
     புதையல்ஒன்று செய்யலாம்;
தேவியுன்றன் கன்னக்குழி
     தேடியதை நிரப்பலாம்!


பாதம்பட்ட துளிநீரைப்

     பத்திரமாய் வைக்கலாம்;
பட்டமரம் துளிர்க்குமதைப்
     பக்குவமாய்த் தெளிக்கலாம்!


வெட்டியெறிந்த நகப்பிசிறை

     விண்ணுலகு அனுப்பலாம்;
கட்டழகின் மாதிரியாய்க்
     காட்டிப்பெருமை அடிக்கலாம்!


கால்பதித்த மண்ணெடுத்துக்

     கோயிலொன்று கட்டலாம்;
தேவதையே நீயேதான்
     தெய்வமென்று வணங்கலாம்!


கொலுசுமணியின் தினுசுகண்டு

     கொள்ளையடித்துப் போகலாம்;
கொஞ்சம்சுரண்டி நெஞ்சில் தடவிக்
     காதல்நோயைத் தணிக்கலாம்!

பனிவிரல்கள் என்மீது

      பட்டுவிட நேரலாம்;
இனியுமென்ன உலகிலெனக்கு
       இந்நொடியே சாகலாம்!(ஈரடியா ணென்சீர் கொண்டமைவனவெல்லாந் தாழிசை யாம்.)


                         (எனது "சூரல் பம்பிய சிறுகான் யாறு" நூலிலிருந்து....!)
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

10/6/12

2

அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள்

|

என்ன இவ்வளவு தாமதமாக ஒரு பதிவா என்று பார்க்காதீர்கள்...இது வேறு கதை ...

அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எது  ?
இங்கிலாந்து, நியூஸிலாந்து வெளியேறியது...

இத்தொடர்கள் எல்லாம் செய்தித்தாள்களில் வந்தவை ..அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்றும் இங்கிலாந்து , நியூசிலாந்து அணிகள் வெளியேறின என்றும் எழுதியிருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்..? 
ENGLAND AND NEWZEALAND  IS OUT 
என்று யாரும் எழுதுவதும் இல்லை..எழுதினால் அதை யாரும் ரசிப்பதும் இல்லை.......ம்ம்ம்ம்ம்...என்னத்தச் சொல்ல..?போயிட்டு வர்றேன்...
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

9/29/12

11

தூய தமிழ்ச்சொற்கள்

|

டக்கர் - அருமை
தங்கம் - பொன்
ஸ்வர்ணம் - பொன்
குரு - ஆசான், ஆசிரியர்
உல்லாசம்- களிப்பு


வலைப்பூக்களில் தூய தமிழைப் பயன்படுத்துவோம்
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

9/27/12

2

கோயம்புத்தூருக்கு மோனோ ரெயில்

|
தொழில், கல்வி,சுற்றுலா மற்றும் மருத்துவத்துறைகளில் கோலோச்சிவரும் கோயம்புத்தூர் மாநகரம் கட்டமைப்பு வசதிகளில் போக்குவரத்தைப் பொருத்தவரையில்  பெருகிவரும் மக்கள்தொகையைச் சமாளிக்க இயலாமல் திணறி வருகிறது. INDIAN TIER II CITIES பிரிவில் வரும் இருபது நகரங்களில் ஒன்றான கோவையில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவரிகிறார்கள்.. பேருந்து, ரெயில் விமானம் என இந்தியாவின் அனைத்துப்பகுதிகளுடனும் சிறப்பாக இணைக்கப்பட்டிருந்தாலும் மாநகரப்போக்குவரத்து நெருக்கடி என்பது நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

சத்தி சாலை, பொள்ளாச்சி சாலைப் போக்குவரத்து நெரிசலில் மாட்டினால்  விழிபிதுங்கிவிடும்..  இந்த இடையூறைத் தவிர்க்க   மோனோ ரெயில் திட்டம் உதவிகரமாக இருக்கும் .. மாநகராட்சிக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுமென நினைக்கிறேன்..TUFISIL ( Tamilnadu Urban Infrastructure Finanacial Service Limited)) எனப்படும் மாநில அமைப்பிற்கு இந்த வரைவு அனுப்பப்படும்.
in comparison
city                    urban area population       city limit population                     project status

KOCHI                     20 Lakh                           7.5 Lakh                    metro work under process

KOZHIKODE          19.5Lakh                          4.5  Lakh                  DPR prepared

THIRUVAN
ANTHAPURAM     15 Lakh                            8 Lakh                       project under study

COIMBATORE      21.5  Lakh                        10.5 Lakh                  feasibility study to be conducted.
                                                                                                         ( Courtesy : TOI )
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

9/25/12

7

சுடிதாரா...குர்தீஸா...?

|

இன்று
 வருவாயா மாட்டாயா...
சுடிதாரா..குர்தீஸா...
கொண்டையா..பின்னலா..
பஸ்ஸா....டூவீலரா...
பார்ப்பாயா...பார்க்கமாட்டாயா....
என்று பட்டிமன்றம் நடத்தியே
என் பகல்பொழுதுகள் கழிகின்றன...!


மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

9/24/12

7

மக்காயாலாவுக்கு மீனிங் தெரியுமா மக்களே....?

|
தற்செயலாகப் பார்க்க நேரிட்டதிரைப்படம் "நான்". போய் அமர்ந்த சிறிது நேரத்திலேயே அந்தப் பாடல் வந்தது.  மக்கயாலா.......ஒருமணி நேரம் மட்டும் நேரத்தைப் போக்க வந்த இடத்தில் மயக்கும் இசையும் , துள்ளும் அசைவுகளும், வசீகர வரிகளுமாக மக்கயாலா பாடல் மனதில் நச்சென்றுஅமர்ந்துகொண்டது..மக்கயாலாவுக்குப் பொருள் என்னவென்று தேடினேன்..பாடலாசிரியர் என்ன பொருளில் எழுதினார் என்று தெரியாது.ஆனால் மக்கயாலா என்பது MICHAELA  என்பதன் நவீன வடிவம் என்றும்  அழகான , எல்லாரையும் வசீகரிக்கக்கூடிய, நளினமான கூந்தலையுடைய,அழகான கண்களையுடைய இளம்பெண் என்றும் பொருள் கிடைத்தது......பொருள் தெரியாமல் மக்கள் போராடிக்கொண்டிருப்பார்களே என்ற்தேடலின் அடிப்படையில்  இந்தப் பதிவைத் தருகிறேன்.

 

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto