11/1/10

பொன்னியின் செல்வன்

|தமிழர்தம் உள்ளங்களில் தனியிடம்  பெற்ற பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் திரைப்பட வடிவம் பெறப்போகிறது எனுஞ் செய்தியினை ஆங்கில இதழொன்றின் மூலம் நேற்றறிந்தேன். 
 சென்றுபோன செப்டெம்பர் மாதத்தின் இறுதி நாட்களில்தான் ஐந்தாம் முறையாகப் பொன்னியின் செல்வனை வாசித்து முடித்திருந்ததாலும் , அதே வாரத்தில் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமவாது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்தபடியாலும் பொன்னியின் செல்வன் கதைக்களம் இன்னமும் கண்ணை விட்டகலாத நிலையில் அச்செய்தி பேரின்பம் பயப்பதாயிருந்தது.
  வந்தியத்தேவனும், திருமலையப்பனும், நந்தினியும் உருவம் பெற்று உலவப்போகிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவே இனிப்பாக உள்ளது.கடம்பூர் மாளிகை சுரங்கப்பாதையும், நாகப்பட்டினம் சூடாமணி விகாரமும், பழையாறை அரண்மனையும், தஞ்சைக்கோட்டையும் வெள்ளித்திரையில் விழப்போகின்றன.அநிருத்த பிரம்மராயரின் சாதுர்யத்தையும், குந்தவையின் புத்தி கூர்மையையும், அருள்மொழிவர்மனின் ஆற்றலையும், பழுcஏட்டரையரின் தீரத்தையும் ,ஆதித கரிகாலனின் வீரத்தையும் இருவிழிகளாலும் அள்ளி விழுங்கப்போகிறோம். 

கார்டூனிஸ்ட் மதன் அவர்கள் ஒரு முறை சொன்னது போலப் பொன்னியின் செல்வனுக்கு இருந்து வரும் கண்ணுக்குத் தெரியாத ரசிகர்களின் நீண்ட நாளைய கனவது.அமரர் கல்கி அளித்த அற்புதமான படைப்புபொன்னியின் செல்வன். சரித்திர சம்பவங்கள், வரலாற்றுண்மைகள்,தல வரலாறுகள் ஆகியவற்றைத் திறம்படக் கோத்து , கற்பனை கலந்து அதே நேரம் உண்மையையும் திரித்து விடாது எண்ணற்ற கதாபாத்திரங்களுடன் வலிமையான கதைப்பின்னலை சுவைபடக் கொண்டு சென்ற் பாங்கு வியப்பூட்டுகிறது.
 அமரர் கல்கியின் எளிமையான நடை, இனிமையான வருணனைகள்,நறுக்குத் தெறிக்கும் உரையாடல்கள், வரலாற்றுண்மைகளைச் சுவைபட தெரிவிக்கும் கலை, கதாபாத்திரத்தின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டும் தன்மை, இழையோடும் நகைச்சுவை ஆகியவை இந்நாவலின் மகத்தான வெற்றிக்கு ஒரு சில காரணங்கள்.
   பள்ளிப்பருவத்தில் இரு முறையும், கள்ளூரிப் பருவத்தில் இரு முறையும் அதன்பிறகு ஒரு முறையும் படித்த பொன்னியின் செல்வன் ஒவ்வொருமுறையும் புதிதாகத்தான் தெரிகிறது . அதே  உணர்வினைத் திரைபடமும் தரவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.கதையின் போக்கு , , கதாபாத்திரங்களின் குணநலன்கள் ஆகியவை சிதையாவண்ணம் திரக்கதை இருத்தல் வெண்டும். சரித்திரப் படமென்பதால் கலை இயக்குநருக்கும், ஆடை அலங்கார நிபுணர்களுக்கும் அதிக வேலையும் சவாலுமிருக்கும்..
 புதினம் அருள்மொழிவர்மனின் தியாகத்துடன் நிறைவுற்றது. திரைப்படத்தில் அதுபோக எஞ்சியிருக்கும் சஸ்பென்ஸ் முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டும் என்னும் ஆர்வம் இயல்பிலேயே எல்லாருக்கும் எழும். வாசிக்கும் பழக்கம் அருகி வரும் இந்நாளில் பொன்னியின் செல்வனைப் படித்தறியாத தலைமுறையினர்க்கும் புரியும் வகையில்,
*நந்தினியின் பிறப்பு மற்றும் முடிவு
*குந்தவையின் காதல்
*அருள்மொழிவர்மனின் அரசுரிமை 
ஆகியவற்றத் தெளிவாக்க வேண்டும்.
  புதினம் ஏற்படுத்திய அதிர்வு திரைப்படத்திலும் இருக்க வேண்டும் என்பதுதான் இயக்குநருக்கு இதிலுள்ள ஒரே சவால்!
வாக்களிப்புப் பட்டைகள்

0 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto