2/11/11

'முன்னாள்' படும்பாடு!

|

"முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தொல்காப்பியன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார்".
"முன்னாள் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு.கபிலன் அவர்கள் பரிசுகளை வழங்கினார்"
மேற்கண்ட தொடர்களைப்போலப் பல தொடர்களை நாம் அடிக்கடிக் கேள்விப்பட்டிருப்போம்.  சட்டமன்றம் என்பது இன்றும் தொடர்ந்து இயங்கிவரும் ஓர் அமைப்பு . அதனை முன்னாள் சட்ட மன்றம் என்று கூறினால், என்றோ , எப்பொழுதோ இருந்த மன்றம் என்று பொருள்படும். அல்லது இந்நாளில் இருக்கும் சட்டமன்றத்தினின்றும் ஏதோ ஒருவகையில் வேறுபட்ட ஒரு மன்றம் என்னும் பொருள் கொள்ள நேரிடும். ஆனால் இத்தொடரை எழுதியவர் அல்லது கூறியவர் உணர்த்த விரும்புவது என்னவெனில் , சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த திரு.தொல்காப்பியன் என்பதேயாகும். 
அதன் சரியன வடிவமானது,
 "சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு .தொல்காப்பியன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார்" என்பதாகும்.அதேபோன்று , "தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. கபிலன் " என்பதே சரியானதும் முறையானதும் ஆகும்.
  தமிழறிவோம் ! தலை நிமிர்வோம்!!
வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

Stock said... 11/2/11 9:55 AM

'முன்னாள்' தொடர்பான உங்கள் எண்ணங்களை ஒப்புக்கொள்கிறேன்.
தமிழ்ச்சங்கத்தின் உதாரணம் சரியே. ஆனால் சட்டமன்றம் உதாரணம் தவறு. காரணம் சட்டமன்றம் ஒவ்வொரு தேர்தலின்போதும் கலைக்கப்பட்டு புதிதாய் உருவாக்கப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய சட்டமன்றம் பதிமூன்றாவது சட்டமன்றம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 12வது சட்டமன்றத்தில் உறுப்பினராய் இருந்தவரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்று அழைப்பதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

senkunroor said... 12/2/11 8:30 AM

நன்று ! வாழ்த்துக்கள்!!

DrPKandaswamyPhD said... 12/2/11 3:38 PM

உங்கள் பதிவை நீங்கள் படிப்பதுண்டா? படிப்பதற்கு லகுவாய் உள்ளதா?

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto