3/11/11

சூலூர்-பெயர்க்காரணம்

|
கோயம்புத்தூர்  மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படும் முன்பு எங்கள் வசிப்பிடம் பல்லடம் தாலுகாவில் இருந்தது. தற்போது பல்லடம் தாலுகா கோயம்புத்தூரிலிருந்து பிரிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்துக்குள் வருவதால், பல்லடம் தாலுகாவிலிருந்த சூலூர், சுல்தான்பேட்டை ஒன்றியங்கள் மட்டும் கோயம்புத்தூர் மாவட்டத்திலேயே சூலூரைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய தாலூகாவில் அமைகின்றன.எனவே எங்களது புதிய தாலுகாத் தலைநகரமான சூலூரைப் பற்றி ஒரு சுவையான தகவலைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
கோயம்புத்தூர் மாநகரின் நீட்சியான சூலூர் நகரம், தேசிய நெடுஞ்சாலை எண் 67 இல் அமைந்துள்ளது.நொய்யலாற்றங்கரையிலமைந்துள்ள இந்நகரில் எந்நேரமும் குளிர்நத காற்று வீசிக்கொண்டிருக்கும் அழகான படகுத்துறை உண்டு.கரையை ஒட்டி முன்பு சூரல் எனப்படும் பிரம்பு அடர்ந்து வளர்ந்திருந்ததால்தான் சூரலூர் என்றிருந்து காலப்போக்கில் மருவி சூலூர் என்றானது எனப் படித்திருக்கிறேன்!
கேரள மாநிலத்தையும், கோயம்புத்தூரையும் இந்தியாவின் பிறபகுதிகளுடன் இணைக்கும் பெரும்பாலான ரெயில் வண்டிகளும் சூலூரைத்தான் கடந்து செல்கின்றன.இவ்வூரில் விமானப் படைத்தளமும் அமைந்துள்ளது. எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் சுற்றிலும் அமைந்துள்ள சூலூர் நகரானது பலதரப்பு மக்களும் வசிக்கும் இடமாகும்!
வாக்களிப்புப் பட்டைகள்

7 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

பழமைபேசி said... 11/3/11 8:30 AM

நான் இரங்கநாத புரம்... அடுத்த வாரம் சந்திப்பமுங்களா??

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... 11/3/11 8:44 AM

நிச்சயமாக....வெகு ஆவலாக இருக்கிறேன் பழமைபேசியைச் சந்திக்க....

senkunroor said... 11/3/11 9:06 AM

இதே போலப் பல ஊர்களுக்கும் பெயர்க்காரணங்கள் உண்டு, முயலுங்கள்!

அகில் பூங்குன்றன் said... 11/3/11 9:26 AM

நான் சூலூர் பள்ளியில் தான் படித்தேன்.... நல்ல ஊர்.

தமிழ்மலர் said... 11/3/11 9:35 AM

வாழ்த்துக்கள்.......

Word verification எடுத்துவிடுங்கள்

ராஜ நடராஜன் said... 11/3/11 9:55 AM

நிறம் கண்ணை உறுத்துகிறது.பச்சைக்கலர் பின் புலத்துக்கு இயல்பான கருப்பு எழுத்தும் வெள்ளை நிறமும் அழகாக இருக்குமே.மேக்கப் வேண்டாமே:)

மதுரை சரவணன் said... 11/3/11 10:15 AM

arumaiyaana thakaval.vaalththukkal

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto