5/24/11

கூடுவிட்டுப் போன பின்பும் கூடவருமோ பணமும்!

|

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போனபின்(பு) ஆரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்!

                                                                            -நல்வழி - 22 


திரைகடல் ஓடியும் திரவியம் தேடச் சொன்ன ஔவையார், தேடிவைத்த பணம் எதுவரைக்கும் கூடவரும் என்கிறார். 
அதனால்தான் தேடிவைத்த பணத்தையும் பிறவற்றையும் நாமும் துய்த்துப் பிறர்க்கும் கொடுத்து வாழ வேண்டும் என்கிறார்.ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென்(று) இட்(டு) உண்(டு) இரும்.
                                                                           நல்வழி - 10

வாழ்க்கைத் தத்துவத்தையும் அறவியலையும் ஔவைப்பாட்டி எவ்வளவு அழகாக நான்கு வரிகளின் நறுக்கென்று உரைத்து வைத்திருக்கிறார்!
ஔவையின் எழுத்துகள் அனைத்தும் ஔடதம் அல்ல, அமுதம்.   ஔடதம், நோய் தீர்க்கும் மருந்து, அமுதமோ , நோய் வராமல் தடுக்கும் அதிசயம்!வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

A.R.ராஜகோபாலன் said... 24/5/11 9:35 AM

நல்ல கருத்துக்களை நல்ல தமிழால் சொன்னதற்கு நன்றி நண்பரே

lakshmana said... 24/5/11 11:07 PM

ஔவை மொழி உண்மையிலேயே அமுத மொழிதான்

தொடுவானம் said... 25/5/11 3:09 AM

எத்தனை தான் நீர் சொன்னாலும் பணத்தாசைதான் ஒழியுமோ பண்ணாடைகளிடம்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto