5/27/11

உங்கள் வலைப்பதிவைப் பிரபலமாக்கச் சில யோசனைகள்!

|

உங்கள் வலைப்பதிவைப் பிரபலமாக்கச் சில யோசனைகள்!
வேறுவேறு பெயர்களில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கித் தனக்குத் தானே பின்னூட்டமிட்டுக்கொள்வது, தொடர்பதிவர்களாகக் காட்டிக்கொள்ள வேறுவேறு பெயர்களில் வலைப்பூக்களை உருவாக்குவது இத்யாதி இத்யாதி.... இவையெல்லாம் ஓல்ட் டெக்னிக்ஸ்!உண்மையிலேயே உங்கள் வலைப்பதிவு பிரபலமாக வேண்டுமா? இதோ ... லட்டு லட்டாகச் சில ஐடியாக்கள்!

### உங்கள் பதிவைப் படிப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டுமானால் கணினி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். எனவே நீங்கள் வீட்டுக்கு வீடு இலவச கணினி கொடுக்கலாம். (என்னிலிருந்தே ஆரம்பிக்கலாம் )

###பின்னூட்டமிடத் தலைக்கு ஆயிரம் ரூபாய் தரலாம்!(அக்கவுன்ட் நம்பர் அனுப்பட்டுமா?)

###ரஜினி, கமல்,விஜய்,மணிரத்னம்,ஷங்கர் போன்றோரின் படங்களை ரிலீஸ் ஆகும்முன்னே எப்படியாவது பிரதி யெடுத்து வலைப்பூவில் ஓட்டலாம்(வேலூரில்)

!###நமது ப்ராடக்டை மார்கெட் செய்ய அதாவது போணி பண்ண விளம்பரங்கள் அவசியம்! எனவே தமிழ்த் தொலைக்காட்சிகள் (சன் டிவி, விஜய் டிவி உட்பட)அனைத்திலும் ப்ரைம்டைமில் உங்களது வலைப்பூவைப் பற்றி நாள்தோறும் விள்ம்பரம் செய்யலாம். வார, நாளிதழ்களிலும் தொடர்ந்து அரைப்பக்க அளவில் விளம்பரம் செய்யலாம்.(அரைப்பக்கம் போதும்)

###விக்கிலீக்ஸ் அஸ்ஸாஞ்ச் மாதிரி வல்லரசு நாடுகளின் ராணுவ ரகசியங்களைக் கண்டறிந்து வெளியிடலாம்.(சி.ஐ.ஏ., மொஸ்ஸாட் வகையறாக்கள் லாடம் கட்டினால் என்ன, பிரபலமாவதுதானே நமக்கு நோக்கம்?)

###வாராவாரம் ஒரு வி.ஐ.பி.(சச்சின், ஏ.ஆர்.ரகுமான்,அமீர்கான்,அப்துல்கலாம்,ஒபாமா போன்றோரிடம்) பேட்டி எடுத்து வெளியிடலாம். (பேட்டி கொடுக்க நானும் தயார்)

###சக வலைப்பதிவர்களின் இடுகைகளைச் சகட்டுமேனிக்குத் திட்டித்தீர்த்துப் பின்னூட்டமிடலாம்.அப்பொழுதுதான் திருப்பித் திட்ட அவர்களும் உங்களது வலைப்பூவுக்கு வருவார்கள்!(நமக்குத் தேவை அதிகப் பின்னூட்டங்கள், அவ்வளவுதான்!)

###சக பதிவர்களின் இடுகைகளைத் திருடி வெளியிடலாம்.நிச்சயமாக அவற்றை எழுதியவர்களாவது வந்து பார்ப்பார்கள்!(வீட்டுக்கு அரிவாளோடு..?)

###இது போன்ற பயனுள்ள தகவல்களைத் தொடர்ந்து வெளியிடலாம்!(இதுவரைக்கும் எத்தனை பேர் இதேபோலப் பதிவு செய்தார்களோ, நான் வலைப்பதிவுலகத்துக்கு ரொம்பப் புதுசு.)

###உலகில் இதுவரை யாராலும் தீர்வு காண் முடியாத விஷயங்களுக்குத் தீர்வு கண்டு பதிவேற்றலாம், கூட்டம் அம்மும்!மனைவி நம்பும்படிப் பொய் சொல்வது, பொது இடங்களில் எச்சில், சிறுநீர் மற்றும் இன்னபிற இதர கழிவுச் சமாச்சாரங்களைக் கொட்டாமல் தடுப்பது, மாதச் சம்பளத்தில் மிச்சம் பிடிப்பது போன்றவை. (எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலீங்)

###சில நோய்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவையெல்லாம் உங்களது பதிவைப் படிக்கும்போது குணமாவதாக ஒரு மேட்டரை நீங்களே கிளப்பி விடலாம்!(படித்தபின் பி.பி.யோ மனநோயோ வந்தால் என்ன செய்வது?)

###சர்வதேச ஸ்டைலில் பெயர்வைத்துக்கொண்டு ஓர் அமைப்பை உருவாக்கி அதன் விருதை உங்கள் வலைப்பூவுக்குத் தரலாம்.(நீங்கள் மட்டுமே அதில் உறுப்பினர்)

###ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளோடு பதிவேற்றலாம்!(ஒரு கவன ஈர்ப்புக்குத்தான்)

### அரை மணி நேரத்துக்கு ஒரு இடுகை என்ற வீதத்தில் கூகுளையே கும்மியெடுக்கலாம். (அதென்ன சைபர் க்ரைமா, குண்டாஸா.... நமக்கு சட்ட நுணுக்கமெல்லாம் அவ்வளவாத் தெரியாது!)

###பதிவுகள் மூலமாக முதியோர் கல்வி நடத்தலாம்! (கிராமப் புறங்களில் பெரும் வரவேற்பிருக்கும்!)

ஓகே பாஸ்,போய்க் கலக்குங்க! வாழ்த்துக்கள்!!
வாக்களிப்புப் பட்டைகள்

12 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

ஆர்.கே.சதீஷ்குமார் said... 27/5/11 10:42 PM

அடேயப்பா செம தூள் நல்லா ரசிச்சு படிச்சேன்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... 27/5/11 10:51 PM

நன்றி நண்பரே

NKS.ஹாஜா மைதீன் said... 27/5/11 11:33 PM

ஹா ஹா ஹா...நல்ல யோசனைகள்தான்.....

Mahan.Thamesh said... 27/5/11 11:58 PM

அடடா இது நல்லா இருக்கே ஐடியா சுப்பர்

Anonymous said... 28/5/11 12:42 AM

payangaram

Shanthi said... 28/5/11 3:44 AM

comedy

lakshmana said... 28/5/11 3:53 AM

SUPERAA IRUNTHUCHUNGA

ஷர்புதீன் said... 28/5/11 9:32 PM

ஹ ஹ ஹ ஹா

தொடுவானம் said... 2/6/11 5:56 AM

ஐடியா நல்லா இருக்குங்க ஆனால் அடி கிடைத்தால் கண்டிப்பா நீங்களும் துணைக்கு வருணுங்க!

senkunroor said... 3/6/11 11:39 AM

ஐ.. சோக்கு..!

AROUNA SELVAME said... 31/7/12 7:16 AM

அடக்கடவுளே.....!!!

இந்த மாதிரியெல்லாம் ஐடியா கொடுப்பாங்களா...

நல்ல நல்ல ஐடியாக்கள்.
தொடர்ந்து இதே போல் நிறைய ஐடியாக்கள் கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.


(ஏதோ நாமும் பதிவுகளை கொஞ்சம் பிரபலம் ஆக்கலாம் என்று நினைத்து வந்தால்....இப்படியா....ம்ம்ம்)

KALAIMAHEL HIDAYA Risvi said... 20/2/15 2:21 AM

நன்றி நண்பரே

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto