6/23/11

கனவில் வரட்டுமா?

|
நேரிசை வெண்பாக்கள்:
மூன்றாம் கோணம் வலைபத்திரிகை- கவிதைப்போட்டி-
http://inthiya.in/ta/?p=7304

மூன்றாம் கோணம் வலைபத்திரிகை அறிவித்துள்ள கவிதைப்போட்டிக்காக அவர்கள் கொடுத்திருந்த படத்தை வைத்து எழுதிய கவிதை இது.


கனவில் வரட்டுமா?   



சூழ்ந்த துயரும் சுகமும் மறந்திரவில்
ஆழ்ந்து துயிலும் அழகேநான் - வாழ்ந்து
பெறுவது வேறென்ன பெண்ணரசி உன்றன்
குறுநகை யன்ன கொடை!


திறவாயோ என்றுன் திருவடியில் சாய்ந்தே
உறங்காமல் பார்த்திருப்பேன் உன்னை - நிறமொளிரும்
ஓவியம்போல் எவ்வா றுறங்குகிறாய் பக்தன்போல்
சேவித்து நின்றேன் சிலிர்த்து!


தங்கத் தளிர்க்கொடியே தாமரையே வான்மதியே
பொங்கிப் பெருகுதடி பொன்முகத்தில் ‍- ‍ தங்கித்
தினவெடுக்கும் பேரழகைத் தீண்ட வருவேன்
கனவிலுன்மேல் மேகமாய்க் கவிழ்ந்து!

தூங்கிப் புரள்கிறாய் தோகையே கண்டுள்ளம்
ஏங்கித் தவிக்கிறது எப்படித்தான் -தாங்கிக்
கழிப்பேனோ வாழ்வைநான் காதல்நோய் தீண்டக்
கிழியாதோ என்னிதயம் கேள்!


நிலவும் கவியெழுதும் நீயுறங்கும் சீரைச்
சிலநொடி பார்த்தாலே சிந்தை - கலைந்துவிடும்
நில்லாதே என்னாவி நெஞ்சுக்குள் தூக்கத்தால்
கொல்லாதே மூடியகண் கொண்டு!

புரண்டு படுக்காதே பூகம்பம் என்னுள்
திரண்டு பிதுங்கித் திமிறும் - இரண்டு
மலைகள் நிகர்த்த மதுக்கலசம் கண்டு
நிலைகுலையச் செய்யும் நிமிர்ந்து!


அள்ளிக் கரங்களில் அப்படியே தூக்கிவிடத்
துள்ளிக் குதித்துத் துடிக்குதடி - உள்ளம்
கனவில் ஒருமுறைநீ கண்டுவிட என்னைத்
தினமும் புரிவேன் தவம்!

சிற்பமாய் உன்னைச் செதுக்கிய ப்ரம்மனின்
கற்பனைதான் என்னேபோ கண்டவுடன் - பொற்சிலைதான்
தூங்குகிற தென்றே துணிவர் எவரும்நீ
தூங்குகிற பேரழகு பார்த்து!



உறங்குகிறாய் அங்கே உருகிநான் இங்கே
கிறங்குகிறேன் வண்ணநிறைக் கிண்ணந் - திறந்தூற்றிப்
பெய்து முகிலும் பிசகில்லா மெத்தையை
நெய்து கொடுத்ததோ சொல்!

பின்னிரவில் மெல்லப் பிறைநிலவும் வந்தெட்டிச்
சன்னல் வழியே சரிந்தபடி - கன்னிநீ
தூங்குவதைப் பார்த்தபடி தொண்டை செருமிவிடும்
ஏங்கிப்போய் ஓர்பெரு மூச்சு!




வாக்களிப்புப் பட்டைகள்

6 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said... 23/6/11 5:42 AM

அருமையான வார்த்தைத் தொடுப்புகள் அழகான உணர்வுகள் கவிதை கலக்கல் . வாழ்த்துக்கள்

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 24/6/11 1:06 AM

அருமையான வார்த்தைகளின் கதம்பம் இந்தக் கவிதை..

அகிலம் தங்கதுரை said... 24/6/11 9:37 PM

கனவில் வரட்டுமா?

"சிற்பமாய் உன்னைச் செதுக்கிய ப்ரம்மனின்
கற்பனைதான்" என்னேபோ கண்டவுடன் - பொற்சிலைதான்
தூங்குகிற தென்றே துணிவர் எவரும்நீ
தூங்குகிற பேரழகு பார்த்து!
பிரம்மனின் கற்பனையை உமது கற்பனை உச்சுக்கொட்டும் அளவு விஞ்சிவிட்டது போரும்!வாழ்த்துக்கள்

தொடுவானம் said... 25/6/11 2:17 AM

கவிதை சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Ice said... 27/6/11 11:14 AM

Word limit 100 right?!

But beautiful phrasing!!

She-nisi said... 22/7/11 6:57 PM

வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்!

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto