7/25/11

உறக்கம் வராதவனின் உளறல்கள் !

|

நள்ளிரவாகியும் உறக்கம் பீடிக்காத கண்களாலும், உருகிக் கொண்டிருக்கும் இதயத்தாலும், விரலிடுக்கில் ஒழுகும் கவிதையை இங்கே ஊற்றி வைக்கிறேன்! படித்துப் பாருங்கள்!!


விடிந்தபின்னும் என்மனதில்
  வெளிச்சம் வரவில்லை- துக்கம்
வடிந்துவிட என்கண்களில்
   வழியும் படவில்லை!


இடிந்துபோன இதயச்சுவர்
   இன்னல் தந்தது - என்னைக்
கடந்துபோன காலமெலாம்
   கருகி வெந்தது!


மடிந்துவிட்ட வழிகள்தேடி
   மனது துடித்தது.- அதில்
படிந்துவிட்ட பாசம்தடுக்கப்
   பரி தவித்தது!

உடைந்துபோன உள்ளத்திலே  
    ஊற்றுத் திறந்தது ‍ -நான்
அடைந்திருந்த கவலைகளை
   அலச மற‌ந்தது

கண்விழியில் கவலைச்சுமை
   காயம் செய்தது - என்
எண்ணமெல்லாம் கதறிப்புலம்ப‌
  எட்டிப் பார்த்தது1
வாக்களிப்புப் பட்டைகள்

5 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

Anonymous said... 25/7/11 12:22 PM

very nice

senkunroor said... 25/7/11 12:37 PM

தகிக்கும் தவிப்பு!
அருமையான வரிகள்!!

அகிலம் தங்கதுரை said... 27/7/11 5:40 PM

"கண்விழியில் கவலைச்சுமை
காயம் செய்தது"
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

Anonymous said... 3/8/11 11:25 AM

உறக்கம் அவ்வளவு எளிதில் வராதுதான்

Anonymous said... 12/8/11 5:39 AM

very good work

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto