7/25/11

தகிக்கும் தவிப்பு!

|

ஏறெடுத்துப் பார்த்தநொடி ஏனிப்படி ஆனதடி
  எதுவுமெனக்கு உலகிலினித் துச்சம் - நீயோ
சேறெடுத்துப் பூசும்படி செய்துவிட்ட கோலமடி
  செந்தணலில் விழுவதுதான் மிச்சம்!


ஆதரவாய் அன்றிருந்த போதகலக் கண்கள்விரித்து
  அழகழகாய்ப் பேசியது இன்னும் - நீஇன்று
வேதனையாம் இருட்குழியில் வெறுத்தொதுக்கித் தள்ளும்போதும்
  வெளிச்சம்போட்டு என்னுயிரில் மின்னும்!



கண்டபடி என்னுயிரைக் கலைத்துவிட்டாய் இனியெனது
   கண்ணீரின் ஈரமென்று உலரும்? - இங்கே
மண்டிக்கிடக்கும் இருள்விலகி மகிழ்ச்சிபுரளும் நாளைக்காய்
  மறுபடியும் என்றுபொழுது புலரும்?


வெட்டவெளிப் பொட்டலிலே வெறுமைமட்டும் துணையிருக்க
  வெண்ணிலவின் வருகைபார்த்து நாளும்- சோகம்
கொட்டிவிடக் குமுறித்தீர்க்கக் கட்டிருளில் காத்திருப்பேன்
   கவலையெல்லாம் எப்பொழுது மாளும்?



கற்பனைகள் கனவுகளைக் கவிதைகளாய் உருக்கிவிட்டு
   காகிதத்தில் படியும்காதல் வெப்பம்- அவளின்
கற்கள்பதித்த இதயம்தனைக் கசிந்துருகச் செய்யமெல்ல
   காத்திருந்து காத்திருந்து தோற்கும்!


வாக்களிப்புப் பட்டைகள்

5 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

senkunroor said... 25/7/11 12:37 PM

superb

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 25/7/11 6:26 PM

அசத்தலான கவிதை நண்பரே..
பாராட்டுகள்..

"என் ராஜபாட்டை"- ராஜா said... 25/7/11 8:16 PM

Kalakkal kavithai

தொடுவானம் said... 26/7/11 5:26 AM

கவிதை கற்கண்டு, ஆனால் கசப்பாய் உள்ளது! (சோகம்)

அகிலம் தங்கதுரை said... 27/7/11 5:44 PM

வெட்டவெளிப் பொட்டலிலே வெறுமைமட்டும் துணையிருக்க
வெண்ணிலவின் வருகைபார்த்து நாளும்- சோகம்
கொட்டிவிடக் குமுறித்தீர்க்கக் கட்டிருளில் காத்திருப்பேன்
கவலையெல்லாம் எப்பொழுது மாளும்?
தனிமையின் கொடுமையை தரமாய் சொல்லியிருக்கிறீர்-வாழ்த்துக்கள்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto