8/17/11

பத்துவகை அழகு

|

நன்னூலில் பவணந்தி முனிவர் பத்து வகை அழகுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் . இன்றைய பதிவுலகக் காலகட்டத்தில் கூட அவை எவ்வளவு அழகாகப் பொருந்திப் போகின்றன என்பதைப் பார்த்தால்வியப்பாக இருக்கும் . பதிவர்கள் அனைவர்க்கும் இது தேவையான செய்தியாகும்.படித்துப் பாருங்கள் நண்பர்களே!

சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்,
நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல்,
ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல்,
முறையின்வைப்பே, உலகமலையாமை,
விழுமியது பயத்தல், விளக்குதாரணத்தது
ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே!
      (நன்னூல்-13)

சுருங்கச் சொல்லல்:   சொற்கள் வீணாக விரிந்து செல்லாமல் சுருக்கமாகச் சொல்லுதல்(வின்ஸ்டன் சர்ச்சிலிடம் சொற்பொழிவுக்காகத் தேதி கேட்கச் சென்றவர்களிடம் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று கேட்டாராம் சர்ச்சில்!ஒருமணி நேரம் என்றதற்கு , சரி நாளையேவருகிறேன் என்றாராம் . பத்து நிமிடம் என்றவர்களிடத்து ஒருவாரம் அவகாசம் கேட்டாராம்)

விளங்க வைத்தல்: சுருக்கமாகச் சொன்னாலும் விளங்கும் படி இருத்தல் வேண்டும்.

நவின்றோர்க்கினிமை: படிப்பவர்க்கு இன்பத்தைத் தருதல்(நடை ஆங்கிலத்தில் STYLE  என்று சொல்வார்கள்.திரு.விக. அறிஞர் அண்ணா, கல்கி போன்றோரை நினைவு கூர்க.. தென்றல் நடை அடுக்கு மொழி, எளிய நடை , அங்கத நடை என...)

நன்மொழி புணர்த்தல்:நல்ல சொற்களைப் பயன் படுத்துதல் (பிறமொழிக்கலப்பின்றி எழுதுதல், சரியான சொல்லைப் பயன்படுத்துதல் , பார்த்தல் நோக்குதல், காணுதல்,என்பவற்றுக்குள் உள்ள நுட்பமான வேறுபாடுகளை அறிந்து பயன் படுத்துதல்முதலியன)

ஓசையுடைமை: கவிதை புனைவோர்க்கு ஓசை முக்கியம்.யாப்பருங்கலக்க்காரிகையை நாம் விளக்கும் போது இதனைத் தெளிவுறத் தெரிந்து கொள்ளலாம்)

ஆழமுடைத்தாதல்:மேலோட்டமான கருத்தாக இல்லாமல் ஆழமான கருத்துக்களைக் கூறுதல் (திருக்குறள் போல)

முறையின் வைப்பே:கோவை மாறாமல் வரிசைக்கிரமமாகச் சொல்லுதல்.

உலகமலையாமை: வழக்கத்துக்கு மாறாமல் சொல்லுதல்

விழுமியது பயத்தல்:சிறந்த பொருளைத் தருதல்

விளக்குதாரணத்தது: விளங்கத்தக்க, பொருத்தமான எடுத்துக்காட்டுகளை ஆங்காங்கே காட்டுதல்.

இவையெல்லாம் நூலுக்கு அழகெனக்கூறும் நன்னுலார். பத்துவகைக்  குற்றங்களையும் பட்டியலிட்டுள்ளார். அதனைப் பின்வரும் இடுகையில் காண்போம்.


வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

G.M Balasubramaniam said... 17/8/11 10:12 PM

நான் உங்களைத் தொடரத் துவங்கி விட்டேன். பயனுள்ள பதிவு. நன்றி. உங்களுக்கு அனுப்பிய மின் அஞ்சல்கள் delivery system failure என்று வருகிறது. அவற்றை உங்களுக்கு forward செய்யும்போது அதில் உங்களுக்கு அனுப்பப் பெறாத என் கவிதையும் இருக்கும் . இதுவும் ஒரு வழி. கிடைத்ததா தெரியப் படுத்துங்கள். நன்றி.

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 18/8/11 3:16 AM

migavum payanulla pathivu..

Msaravanaa said... 18/8/11 3:36 AM

Good..thodarattum ungal padhivu....

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto