8/22/11

சுற்றிச் சுற்றி வருவேன்

|

எனக்கான உன்பார்வையில்
எனக்காக 
எதுவோ வைத்திருக்கிறாய்
என்ற கற்பனையில்தான்
வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது!


நீ வரும் வழியில்

மலைபோல
ஓங்கி உயர்ந்து நிற்கிறது என் காதல்!
நீயோ
புகையினூடே
புகுந்து செல்வதைப்போல
அதனை
ஊடறுத்துச் செல்கிறாய்!மின்விசிறி
சுற்றிச் சுற்றி வந்து
அறையைக் குளிரூட்டிக் கொண்டிருந்தது!
என் காதலோ 
உன்னையே சுற்றிச் சுற்றி வந்து
என்னைச் 
சூடேற்றிக் கொண்டிருக்கிறது!

வாக்களிப்புப் பட்டைகள்

9 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

தமிழ்வாசி - Prakash said... 22/8/11 11:14 PM

காதலியை சுற்றும் காதல் கவிதை...

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 23/8/11 12:13 AM

அசத்தலான கவிதை..

முனைவர்.இரா.குணசீலன் said... 23/8/11 12:24 AM

மின் விசிறி - காதல்

ஒப்பீடு நன்றாகவுள்ளது நண்பா.

முனைவர்.இரா.குணசீலன் said... 23/8/11 12:25 AM

மலையும் - புகையும்

காதலை அழகாகச் சொல்லிவிட்டது.

முனைவர்.இரா.குணசீலன் said... 23/8/11 12:26 AM

எதிர்பார்ப்பு மட்டும் இல்லாவிட்டால் மனிதவாழ்க்கை என்றோ...

வாழ்ந்த சுவடுகள் கூடத் தெரியாமல் போயிருக்கும்..

கவிதை அருமையாக உள்ளது நண்பா.

தொடர்க..

G.M Balasubramaniam said... 23/8/11 2:56 AM

காதலில் எதிர்பார்ப்புகள் கூடும்போது, ஏமாற்றங்களும் கூட வாய்ப்புள்ளது. கவனம்.!

சி.பி.செந்தில்குமார் said... 23/8/11 8:29 PM

காதல் கசக்குதய்யா! காதல் கவிதை படிக்க இனிக்குதய்யா

Anonymous said... 24/8/11 10:44 AM

sweet lines

Anonymous said... 17/9/11 9:37 AM

sweet lines

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto