8/25/11

வா.. என்னில் வசிக்க!

|

நீ குளித்தனுப்பிய
நதிநீரைக்
கடலில் கலக்கவிடும்
திட்டத்தின் பெயர்தான்
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்!


காற்றில் அலையும்
உனது சேலைத்தலைப்பு
எனக்கான
கவிதைகளைக்
காற்றிலேயே விட்டுச் செல்கிறது!
அதுவரை
காற்றைச் 
சுவாசித்து வாழ்ந்த நான்
இப்போது காற்றை
வாசித்தும் வாழ்கிறேன்!


உன்னைக் காணும்போதெல்லாம்
என் இதயம் குழம்பி விடுகிறது!
அமைதியின் உருவாக
இப்படி
 அழகாக அமர்ந்திருக்கும்
இவள் எப்படி
எனக்குள் மட்டும்
அப்படி ஓர் ஆட்டம் 
போடுகிறாள் என்று!
வாக்களிப்புப் பட்டைகள்

7 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

முனைவர்.இரா.குணசீலன் said... 25/8/11 1:27 AM

“கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்!“

இப்படியொரு திட்டத்தை நான் இதுவரைக் கேள்விப்பட்டதே இல்லை!!

நயம்!!

முனைவர்.இரா.குணசீலன் said... 25/8/11 1:31 AM

சேலைத் தலைப்பால்
காற்றில் காதலி எழுதிய கவிதையை
வாசிக்கும் ஆற்றல்
காதலர்களுக்கு மட்டும் தான் உண்டு என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் நண்பா.

முனைவர்.இரா.குணசீலன் said... 25/8/11 1:32 AM

தென்றலும் காற்றுதான் புயலும் காற்றுதான்!!

காதல் படுத்தும் பாட்டை மிக அழகாகக் காட்சிப்படுத்திவிட்டீர்கள் பிரதாப்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 25/8/11 3:13 AM

அசத்தல் கவிதை..
பாராட்டுகள்..

G.M Balasubramaniam said... 27/8/11 3:00 AM

காதல் மனிதனை என்னவெல்லாம் சிந்திக்க வைக்கிறது. நான் அந்த கால கட்டத்தை தாண்டி யிருந்தாலும் உங்கள் தவிப்புகளை உணர முடிகிறது. என் பழைய இடுகைகள் பெரும்பாலும் அந்த கால கட்டத்தில் எழுதிய கவிதைகள்( ?)வாழ்த்துக்கள்.

nithyanand said... 27/8/11 8:56 AM

என்ன ஒரு அழகான கவிதை வாழ்த்துக்கள்

Reena Rajini dsoza said... 30/9/12 11:23 PM

காற்றில் காதலி எழுதிய கவிதையை
வாசிக்கும் ஆற்றல்
காதலர்களுக்கு மட்டும் தான் உண்டு ஆனால் ??????????????????????????????

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto