8/27/11

கொல்லும் காதல்!

|

மண்ணுலகில் நான்பிறந்த
   மாயமென்ன அறிகிலேன்!
கண்ணைக்கட்டிக் காட்டில்விட்ட
   கதியைநானும் அடைந்திட்டேன்!
பெண்ணொருத்தி என்மனத்தைப்
   பிடித்துக்கொண்டு விட்டனள்!
கண்ணிரண்டும் பிதுங்குமளவு
   கலங்கிநானும் சோர்ந்திட்டேன்!


சோறுதூக்கம் எதுவும்மறந்து
   சோர்ந்துநானும் வீழ்ந்திட்டேன்!
கூறுபோட்டுப் பிளந்த இதயம்
   கூவித்துடிக்க மாய்ந்திட்டேன்!
கூறுகெட்ட மடையனாகக்
   கொஞ்சமாக மாறினேன்!
வேறுஎன்ன பைத்தியந்தான்
   வெந்தும்,அனம் நொந்திட்டேன்!


அவள்நினைவைத் தவிரஎதுவும்
   அணுவளவும் வரவில்லை!
அவளில்லாமல் என்னுடலில்
   அரைநொடியும் உயிரில்லை!


பொழுதுவிடிந்த நிமிடம்முதல்
   போய்ப்பார்க்கும் வெறியினில்
அழுதுபுரண்டு என்னிதயம்
   அவளைத்தேடி ஓடிடும்!


பாவிமகள் மாயமந்திரம்
   படித்தவளோ அறிகிலேன்!
தேவியவள் திருமுகத்தைத் 
   தேடிநானும் ஓடுகிறேன்!


பெண்ணுமல்லள் கொடியகாதல்
   பேய்தானவள் சொல்கிறேன்!
என்னசெய்ய அய்யய்யோ
   என்னையேநான் கொல்கிறேன்1
வாக்களிப்புப் பட்டைகள்

6 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

G.M Balasubramaniam said... 27/8/11 2:34 AM

இன்னும் சில நாட்கள்தானே. பொறுத்துக் கொள்ளுங்கள்.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... 27/8/11 2:38 AM

ஐயா , மின்னஞ்சல் பார்த்தீர்களா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 27/8/11 3:13 AM

பெண்ணுமல்லள் கொடியகாதல்
பேய்தானவள் சொல்கிறேன்!
என்னசெய்ய அய்யய்யோ
என்னையேநான் கொல்கிறேன்1.// அசத்தல்..

காந்தி பனங்கூர் said... 27/8/11 3:21 AM

//அவள்நினைவைத் தவிரஎதுவும்
அணுவளவும் வரவில்லை!
அவளில்லாமல் என்னுடலில்
அரைநொடியும் உயிரில்லை!//

அருமையான வரிகள். வாழ்த்துக்கள்

அகிலம் தங்கதுரை said... 7/9/11 3:04 AM

அவளின்றி ஓர் அணுவும் அசையாது
அவளின்றி வேறேதையும் அணுகவும் முடியாது.உமது சித்தங்களை சிக்கென்று பிழிந்த கவிதை

தொடுவானம் said... 12/9/11 1:49 AM

கவிதையை விடவும் உங்கள் காதல் சூப்பர்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto