9/16/11

மிதித்துவிட்டாவது போ!

|


என்னை
இந்தப் பாடுபடுத்துகிறதே,     
உயர்த்தி மடித்து
ஒருக்களித்துச் செருகிவைத்த
கொண்டையில் 
அப்படி 
என்னதான் வைத்திருக்கிறாய்?
நழுவி விரியாதா என்ற 
நப்பாசையுடனும்,
பிரிந்து விட்டால்
பின்னி விடலாமே என்ற 
பேராசையுடனும் நான்
வெறிபொங்கக் காத்திருக்கிறேன்!


ஒற்றை ரோஜாவுடன்
நீவரும் பாதையில்
காத்திருக்கிறேன்!
உனக்காகவே 
உதித்த பூவை
மிதித்துவிட்டாவது போ!


சேலை நெய்யும் போதே
வெட்கத்தையும் 
சேர்ந்து நெய்தார்களா
என்று தெரியவில்லை!
பிறகு
சேலை கட்டும் போது மட்டும்
வெட்கம் உனக்கு 
எங்கிருந்துதான் வந்து
சேர்ந்து கொள்கிறது?வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

"என் ராஜபாட்டை"- ராஜா said... 16/9/11 5:23 AM

//
ஒற்றை ரோஜாவுடன்
நீவரும் பாதையில்
காத்திருக்கிறேன்!
உனக்காகவே
உதித்த பூவை
மிதித்துவிட்டாவது போ!
//
நல்ல வரிகள்

Lakshmi said... 16/9/11 9:05 AM

கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

அகரம் அமுதன் said... 17/9/11 5:55 AM

சேலையும் வெட்கமும் பற்றிய கவிதை என்னை மிகவும் கவர்ந்தது வாழ்த்துக்கள்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto