9/25/11

அன்புத் தமிழர்களே, ஒரு நொடி நில்லுங்கள்.

|

தமிழில் கலந்து விட்ட பிறமொழிச் சொற்களை நம்மில் பலரும் தெரியாமலேயே பயன்படுத்துகின்றனர்.தூய தமிழ்ச் சொற்கள் இருக்க நாம் ஏன் பிறமொழிகளிடம் கையேந்த வேண்டும்?  பிற மொழிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவற்றைத் தமிழில் கலக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.இனிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திப் பாருங்கள்.எவ்வளவு இன்பமாக இருக்கும் என்பதை உணர்வீர்கள். எனக்கு உடனடியாக நினைவில் வந்தவற்றை மட்டும் இங்கு பட்டியலிட்டுள்ளேன். பிழைகள் ஏதேனும் தென்பட்டால் சுட்டிக்காட்டுங்கள்.
போஜனம் -  உணவு, உண்டி
மகசூல் - விளைச்சல்
ஞானம் - அறிவு
ஞாபகம் - நினைவு
ஞாபகசக்தி - நினைவாற்றல்
சூரியன் - ஞாயிறு, கதிர், கதிரவன் , வெய்யோன்
சேவை - தொண்டு , பணி
சமுத்திரம் - கடல் , ஆழி, வேலை, முந்நீர்
கேசம் - மயிர், கூந்தல் .முடி
வியாதி - நோய், பிணி
ருசி - சுவை

யுத்தம் - போர், சண்டை. பொருதல்
பிரதானம் - முதன்மை
பயம் - அச்சம்
சரித்திரம் - வரலாறு
பரிசுத்தம் - தூய்மை
யாகம் - வேள்வி
ரகம் - வகை, வகுப்பு, பிரிவு, இனம்
ரசம் - சாறு
தானம் - கொடை
திலகம் - பொட்டு  


                                      (தொடரும்.......)                                                                

வாக்களிப்புப் பட்டைகள்

6 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

"என் ராஜபாட்டை"- ராஜா said... 25/9/11 8:38 AM

Good post

Anonymous said... 25/9/11 9:26 AM

பயனுள்ள பதிவு

ரா.செழியன். said... 25/9/11 9:39 AM

நல்ல முயற்சி. தொடருங்கள் தோழரே.

Anonymous said... 26/9/11 12:00 AM

தமிழர்களுக்குத் தேவையான பதிவு

அகிலம் தங்கதுரை said... 3/10/11 6:13 AM

தமிழ் அகராதியின் சிறு அதிகாரமாக உமது "அன்புத்தமிழர்களே கொஞ்சம் நில்லுங்கள்" எனும் இடுகை அமைந்துள்ளது.வாழ்த்துக்கள் வளரட்டும் உமது தமிழ்ப்பணி.

cherran varaikalayagam said... 7/10/11 11:20 AM

தோழர் முதலில் உங்களுடைய பெயரின் முன் எழுத்தை தமிழில் போடுங்கள்

சா. ஆனந்தகுமார்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto