9/26/11

முத்தத்துவம் - மூன்றாம் பகுதி

|

கோவைப் பழச்சிவப்புக் கொஞ்சும் இதழ்கொண்ட
பாவையைக் கொஞ்சமாய்ப் பார்த்தாலே - சாவையும்
வாரி அணைத்திடுவேன் வாழ்வில் இனியும்நான்
சேர எதுவுண்டு செப்பு!


கொத்துச் சுளையாய்க் குவிந்த குலையிதழைக்
கொத்திச் சுவைத்துக் குடிக்கையில் - மெத்தைமேல்
வித்தை புரிந்தாள் விதவிதமாய் என்னுடன்
அத்தை மகள்தான் அணைத்து!


பதமாய்ப் படர்ந்தாள் பரவசந் தந்தாள்
மிதமாய் இதழிசை மீட்டி - முதலில்
இதமாய்த் தழுவினாள்; இன்னமு தூறும்
இதழால் சிறைசெய்தாள் ஈர்த்து!


தொட்டுச் சுவைத்தேனத் தோகையின் செவ்வருந்தேன்
சொட்டும் இதழின் சுகத்தினை - விட்டேனா
கொட்டினேன் கன்னத்தில் கோடிமுத்தம் கேளுங்கள்
கட்டிலும் வெட்கியது கண்டு


போதும் இறைவா புவியில் வரமாக
ஏதுமினி வேண்டாம் எனக்கென - மாதவள்
ஒற்றைச் சிறுமுத்தம் இட்டாளே அப்போதே
பெற்றேன் பிறப்பின் பயன்!







வாக்களிப்புப் பட்டைகள்

6 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

தொடுவானம் said... 26/9/11 10:24 PM

கவிதையில் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேன் சொட்டுக்கள்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... 27/9/11 12:31 AM

நன்றி

G.M Balasubramaniam said... 28/9/11 5:40 AM

புது மாப்பிளையின் அனுபவம் தமிழில் விளையாடுகிறது.

Kannan Sampath said... 5/6/12 7:17 AM

உங்கள் கவிதை மிகவும் அழகாக இருக்கிறது. தமிழின் இனிமையை உங்களின் கவிதையில் கண்டேன். மிகவும் நன்றி. ச. கண்ணன்

Reena Rajini dsoza said... 11/3/13 11:51 PM

அன்பே உன் செவ்விதழில் தேன் தடவி புதையல் ஒன்று தேடலாம்.................

Unknown said... 27/12/16 10:39 PM

அஉங்கள் தொடர்பு எண் வேண்டும்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto