9/27/11

ஐநூறா ஐந்நூறா ?

|

ஐநூறா ஐந்நூறா ?


ஐநூறு என்று எழுதுவதா ஐந்நூறு என்று எழுதுவதா என்ற குழப்பம் இன்று நம்மில் பலருக்கும் உள்ளது. 
தமிழுக்கு இலக்கணம் வகுத்துத்தந்த தொல்காப்பியத்தையே இங்கு எடுத்துக்கொள்கிறோம்.


"நூறு முன் வரினும் கூறிய இயல்பே"   (தொல்காப்பியம்,எழுத்ததிகாரம், குற்றியலுகரப் புணரியல், நூற்பா எண் 460)

இதன் பொருள் யாதெனில் , ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்களின் முன்னால் நூறு என்ற எண் வரும்போது , பத்து என்ற எண்ணுக்கு என்ன இலக்கணம் கூறப்பட்டதோ அதுவே பொருந்தும் என்பதாகும்.462 ஆம் நூற்பாவில் "நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா" என்று தொல்காப்பியர் கூறுவதால் ,
ஐந்து + நூறு = ஐந் + நூறு ( 460 ஆம் நூற்பாவின்படி 'து' கெட்டது)
                           =ஐந்நூறு (462 ஆம் நூற்பாவின்படி 'ந்' என்ற ஒற்று திரியாமல்                       அப்படியேநின்றது.)


ஆக, இந்திய ரூபாய் நோட்டில் உள்ளது போல "ஐந்நூறு"என்பதே சரியெனத் துணியலாம்.நமக்கெல்லாம் ஃபை ஹ‌ன்ட்ரட் என்று சொன்னால்தான் சோறு இறங்கும் என்பவர்களுக்கு இப்பதிவு தேவையில்லை!


வாக்களிப்புப் பட்டைகள்

2 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

சென்னை பித்தன் said... 27/9/11 7:24 AM

நன்று.

அகிலம் தங்கதுரை said... 3/10/11 6:21 AM

இனி ஐநூறா? (அ) ஐந்நூறா? என ஐயவினா பலருக்கும் எழாது என நினைக்கிறேன்.ந்ன்றி

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto