10/13/11

காசாளரின் கையொப்பம்!

|
நல்ல தமிழைப் பயன்படுத்துவோம்
அண்மையில் வங்கி ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.அங்கு கண்ட சொற்றொடர்களில் சில!
#தங்க நாணயங்கள் 2,4,8,10,20,50,100 கிராம்களில் கிடைக்கிறது.

#பணம் செலுத்திய ரசீதுகளில் காசாளர் மட்டுமின்றி , வங்கி அதிகாரியின் கையொப்பம் இருக்க வேண்டும்.

மேற்காண் தொடர்களில், தங்க நாணயங்கள் கிடைக்கின்றன எனப் பன்மையில்  எழுதினால் எவ்வளவு இனிமையாக இருக்கும்.ஆங்கிலத்தில் எழுதும் போது எந்த மடையனும்"COINS IS AVAILABLE" என்று எழுத மாட்டான்.
அதேபோல இரண்டாம் தொடரைப் பார்ப்போம்.
காசாளரின் கையொப்பம் மட்டுமின்றி வங்கி அதிகாரியும் கையொப்பம் இடவேண்டும் என்றோ, வங்கி அதிகாரியின் கையொப்பமும் இருக்கவேண்டும் என்றோ வந்தால் எப்படி இருக்கும் எனச் சற்றே சிந்திப்போம். இங்கு சொற்றொடரின் அமைப்பை மட்டுமே பேசுகிறோம், அதிகாரி என்ற தமிழல்லாத சொல்லை அன்று.
எவ்வளவு அடிச்சாலும் தாங்குதே, மெய்யாலுமே தமிழ் நல்ல மொழிதான்.
வாக்களிப்புப் பட்டைகள்

4 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

lakshmana said... 15/10/11 8:17 AM

பயனுள்ள தகவல்கள்

Anonymous said... 15/10/11 8:18 AM

நல்ல முயற்சி

Anonymous said... 21/10/11 8:23 AM

thank you

ஊமைக்கனவுகள். said... 8/4/15 7:27 AM

அய்யா வணக்கம்.

தங்களின் தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன். தங்களின் மொழியுணர்வினுக்கு என் வணக்கங்கள்.

தங்கள் உணர்வினோடு ஒத்த உணர்வினால் பெருந்தகையாளர் பலரோடும் உரச நேர்ந்தமை பற்றிய இந்தப் பதிவினைக் கண்டு கருத்துரைக்க அழைக்கிறேன்.

நன்றி

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto