10/21/11

ஆச்சரியம் அதிசயம்

|
நபர் ஒன்றுக்கு .... என்னும் தொடரில் என்ன பிழை உள்ளது எனக்கேட்டிருந்தோம். நாம் அடிக்கடிக் கேள்விப்படும் சொற்பயன்பாடுகளுள் இதுவும் ஒன்று.நபர் என்பது தமிழ்ச்சொல்லன்று, அதற்கிணையான சொல்லாக "ஆள்" என்பதைக் கூறலாம்.ஆள் என்பவர் உயர்திணையாதலால், ஒன்று என அஃறிணைப் பயன்பாட்டைத்தவிர்த்து ஆள் ஒருவர்க்கு எனலாம். இதிலும் ஆள் என்பது தேவையில்லை. சுருக்கமாக ஒருவர்க்கு எனக் கூறிவிடலாம். தலைக்கு எனக் கூறுவது மரபு. தமிழறிவோம்! அதேபோல "வந்திருந்தவர்கள் எல்லாம் வியப்பிலாழ்ந்தார்கள்" என்பது போன்ற பயன்பாடுகளைக் காண்கிறோம்.வந்திருந்தவர்கள் என்பது உயர்திணையாதலின் எல்லாம் என்பதை விட எல்லாரும் எனக்கூறுவதே சரி.வியப்பிலாழ்ந்தார்கள் என்பதை விடவும் வியப்பிலாழ்ந்தனர் என்பது இன்னும் இனிமை..அதிசயித்தனர், ஆச்சரியப்பட்டனர் என்பனவெல்லாம் தமிழ்ச்சொற்களன்று!வியந்தனர் என்பது தமிழ்ச்சொல்.
வாக்களிப்புப் பட்டைகள்

8 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

அருள் said... 21/10/11 6:20 AM

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

suryajeeva said... 21/10/11 7:28 AM

பகிர்வுக்கு நன்றி... இதே போன்று இலக்கணம் வகுப்பு எடுத்தால் சீக்கிரம் நாங்கள் [பிரமாதமாக]அருமையாக எழுத உதவும்

Anonymous said... 21/10/11 8:21 AM

very useful

G.M Balasubramaniam said... 21/10/11 7:35 PM

நபர் என்பது தமிழ்ச் சொல் அல்ல என்றால், அது எந்த மொழிச்சொல்.?ஒரு வேளை ஆங்கிலத்தின் நம்பர் என்ற சொல்லின் திரிபோ.?

சி.பி.செந்தில்குமார் said... 21/10/11 10:28 PM

நீங்க எம் ஏ தமிழ் போல.. அவ்வ்வ்

"என் ராஜபாட்டை"- ராஜா said... 21/10/11 10:42 PM

அருமை

"என் ராஜபாட்டை"- ராஜா said... 21/10/11 10:42 PM

இன்று என் வலையில்

பா. ம. க சின்னம் மாறுகின்றதா?

கோவி.கண்ணன் said... 11/11/11 12:58 AM

அதிசயம் - வியப்பு

ஆச்சரியம் - பெருவியப்பு

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto