10/23/11

தூய தமிழ்ச்சொற்கள்

|

தமிழ்ச்சொற்கள் என்று நினைத்து நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பிறமொழிச்சொற்கள் சிலவற்றையும் , அவற்றுக்கிணையான தமிழ்ச்சொற்களையும் இங்கு தந்துகொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் மேலும் சில இதோ:
குஷி - களிப்பு, உவகை, மகிழ்ச்சி
தாலுகா - வட்டம்
தீபம் - ஒளி, சுடர்,பிழம்பு
உலோகம் - கனிமம்
மமதை - செருக்கு, ஆணவம், திமிர்
நிச்சயம் - உறுதி
லாபம் - பயன்
போதை - கிறக்கம்
தம் - மூச்சு
தசம்- பத்து


தமிழைப் போற்றுவோம்!

வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

Anonymous said... 23/10/11 7:51 AM

திருத்தங்கள்..

உலோகமும் கனிமமும் வேவ்வேறானவை. உலோகத்துக்குச் சரியான தமிழ்ச்சொல் மாழை.
நிச்சயம் வடசொல்லல்ல. நிச்சயம், நித்தியம் போன்றனவெல்லாம் நில் என்ற வேரிலிருந்து பிறந்தவை. தீ தமிழென்றால் தீபமும் தமிழே. தீவம் என வரவேண்டும். வடக்கே செல்லச் செல்ல
வ > ப ஆக மாறும். இலாவமும் தமிழே. போதை உருதுச் சொல், அதன் நிகரி கிறக்கம் என்பதை விட மத்தம், மதுகை என்பனவாகும். இருபிறப்பியான உன்மத்தத்திலிருக்கும் மத்தம், மதுவிலிருந்து பிறந்த தூயதமிழ்ச் சொல்லாகும். நுண்பொருளில் கிறக்கம் மத்ததிலிருந்து வேறுபடும்.

suryajeeva said... 23/10/11 8:39 AM

யாருங்க அந்த அனானி, உங்க பெயரை சொல்லாம தப்பிச்சுட்டீன்களே... உங்கள் இருவர் சேவையும் தொடர வாழ்த்துக்கள்

யசோதா காந்த் said... 30/10/11 1:21 AM

அருமை நண்பரே உங்கள் வலை தளமும் படைப்புகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ...நன்றி

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto