10/28/11

தூய தமிழ் - சில ஐயங்கள்

|

உலோகத்துக்குச் சரியான தமிழ்ச்சொல்லாக மாழை என்ற அரிய தகவலை நண்பர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். கனிமங்களில் உலோகம் , அலோகம் என்று இரு பிரிவுகள் உண்டு. பள்ளிப் பருவத்தில் 'ம்' என்ற எழுத்தில் முடிவன எல்லாம் (கந்தகம் பாஸ்பரம் தவிர..) உலோகம் என்றும், 'ன்' என்ற எழுக்தில் முடிவன எல்லாம் அலோகம் என்றும் சொல்லித்தந்தார்கள். ஆங்கிலத்தில் ....M ,N   (  SODIUM, POOTTAASIUM--... METALS.OXYGEN , HYDROGEN -- NONMETALS)
உலோகங்கள் பொதுவாக எளிதிற்கடத்தியாகவும், கம்பியாகவும் , தகடாகவும் மாற்றக்கூடிய வகையிலும்,கார ஆக்சைடுகளைத் தரும் வகையிலும், அலோகங்கள் இவற்றினின்று மாறுபட்டும் இருக்கும் . அலோகத்துக்குச் சரியான தமிழ்ச்சொல் வேண்டும். யாராவது சொல்லுங்கள்.
தூரம் என்பது தமிழ்ச்சொல்லாக இருக்கலாம் என நண்பர் கோவிகண்னன் குறிப்பிட்டிருந்தார். தூர் என்ற தமிழ்ச்சொல் தூரம் என்றாகியிருக்கலாம். என்பது சிந்திக்க வேண்டிய கருத்து. ஆனால் தூர் என்பது தோண்டுவது என்றானால் அதை ஆழம் என்றுதான் சொல்வோம், தூரம் என்றோ தொலைவு என்றோ கூறுவது மரபன்று. அதேபோல். சயனம் என்பது சாய், சாய்தல் என்பவற்றிலிருந்து வந்திருக்கலாம். ஆனால், சகரத்தில் துவங்குவன தமிழ்ச்சொற்கள் அல்ல என்று படித்திருக்கிறேன். ஆனால் சகரம் தமிழிலக்கியங்களில் நீண்ட கால்மாக்வே பயன்பட்டு வருகிறது. தொடர்பு எங்கு அறுந்தது என்று தெரியவில்லை. ஐந்து எழுத்துகளுக்கு மேல் வருவனவும் தமிழ்ச்சொற்களன்று எனப் படித்த நினைவு. யாராவது விளக்கினால் நலம்.
வாக்களிப்புப் பட்டைகள்

4 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

மதுரை சரவணன் said... 28/10/11 10:17 AM

vilakkaam theriyavillai.. sinthikka vaiththulleerkal... vidai theduvom.

Anand said... 29/10/11 12:37 AM

தூர் என்பது இந்தியில் தூரத்திற்கு பயன்படுத்த படுகிறது

suryajeeva said... 29/10/11 12:51 AM

நமக்கு அந்த அளவுக்கு ஞானம் இல்லை... நீங்க சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன்

கோவி.கண்ணன் said... 11/11/11 12:56 AM

//தூரம் என்பது தமிழ்ச்சொல்லாக இருக்கலாம் என நண்பர் கோவிகண்னன் குறிப்பிட்டிருந்தார்.//

தவறாக விளங்கிச் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன், தூர்தல் என்றால் அடைவு என்ற பொருளில் வரும்.

*****

சகரச் சொற்கள் தமிழில் மிகுதியா உண்டு, தேவநேயப்பாவாணர் பட்டியலிட்டுள்ளார்.

சட்டுவம், சட்டி, சங்கு, சளி (குளிர்), சாடு, சன்னம் (சிறிய), சவுக்கு.....

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto