10/29/11

சமன்பாட்டின் உண்மைத்தன்மை

|

நழுவி ஒழுகும்
தீராத கணங்களுக்குள்
நுழைந்து,
அறுதியிடப்படாத
சமன்பாட்டின்
உண்மைத்தன்மை புலப்படாமல்,
வழிந்து பெருகும்
இருளோடை கிழிய
எங்கோ கூவும் அடிமனக் குரலின்
சுவடைப்பற்றி ஓடுகின்ற
சிறு பொழுதில்தான் தோன்றியது,
காலத்தைச்சேமிக்கும்
கலைக்குப் பெயர்தான்
மரணம் என்று!எத்தனை இட்டும்,
எத்தனை எடுத்தும்
வாழ்வுப் பெருவெளியில்
தீராத தேடலுடன்
மூச்சிரைக்க ஓடி ஓடி,
தெரியாத கனவிலும்
தெரியாத வளைவிலும்
கண்டும் , கேட்டும், உண்டும், உயிர்த்தும்
உற்றறிந்த
புலன்களின் ஊடே முளைத்த
மயக்க வினாக்களின் முன்னே
யாவும் முயங்கித்தான் கிடக்கின்றன.

வாக்களிப்புப் பட்டைகள்

8 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 29/10/11 10:38 PM

கண்டும் , கேட்டும், உண்டும், உயிர்த்தும்
உற்றறிந்த
புலன்களின் ஊடே முளைத்த
மயக்க வினாக்களின் முன்னே
யாவும் முயங்கித்தான் கிடக்கின்றன.// அசத்தல்

suryajeeva said... 29/10/11 11:05 PM

அருமை

"என் ராஜபாட்டை"- ராஜா said... 29/10/11 11:27 PM

அருமையான கவிதை

"என் ராஜபாட்டை"- ராஜா said... 29/10/11 11:27 PM

இன்று என் வலையில்

வேலாயுதம் – விஜய்க்கு டாப்பா? அல்லது ஆப்பா?

G.M Balasubramaniam said... 29/10/11 11:36 PM

You are trying to get your abstract thinking in words. It is a long search and there are miles to go and still one may not get the answers.

தொடுவானம் said... 30/10/11 9:38 PM

கணிதத்தில் புரிந்த சமண்பாடு, வாழ்க்கையில் புரியவில்லையே!

lakshmana said... 31/10/11 12:13 AM

very nice

விழித்துக்கொள் said... 5/2/12 8:40 PM

padhivu arumai nandri

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto