7/6/12

மின்னித் தீர்க்கிறது

|


மலர் விரிகிறது
     துயிலெழுகிறாய்
மணம் பரவுகிறது
     முகம் கழுவுகிறாய்?
பனி மறைகிறது
    து கில் திருத்துகிறாய்
கதிர் எழுகிறது
     கண்ணாடி பார்க்கிறாய்
குளிர் வழிகிறது
     குளித்து முடிக்கிறாய்
ஒளி தெறிக்கிறது
     ஒப்பனை செய்கிறாய்
குயில் இசைக்கிறது - யாருக்கோ 
     குட்மார்னிங் சொல்கிறாய்!


முகில் நகர்கிறது
    உடை உடுத்துகிறாய்
இலை உதிர்கிறது
    நகம் நறுக்குகிறாய் 
மரம் அசைகிறது
    நடை பயில்கிறாய்
தென்றல் தவழ்கிறது
    கூந்தல் உலர்த்துகிறாய்
மழை பெய்கிறது
    நகை புரிகிறாய்
இடி இடிக்கிறது
    இமை திறக்கிறாய்
மின்னித் தீர்க்கிறது
    விழி சுழற்றுகிறாய்
நிலவு ஒளிர்கிறது 
    நெற்றி துடைக்கிறாய்
மலை தெரிகிறது
    பெருமூச்செறிகிறாய்
உயிர் துடிக்கிறது
   எதிரில் வருகிறாய்









வாக்களிப்புப் பட்டைகள்

7 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

Anonymous said... 7/7/12 12:14 AM

இனிய கவிதை
நிலவு ஒளிர்கிறது
நெற்றி துடைக்கிறாய்

திண்டுக்கல் தனபாலன் said... 7/7/12 10:33 AM

நல்லதொரு கவிதை ! வாழ்த்துக்கள் ! நன்றி !

திண்டுக்கல் தனபாலன் said... 7/7/12 10:34 AM

சின்ன வேண்டுகோள் : இந்த உலவு ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !

Anonymous said... 8/7/12 9:38 AM

நல்ல கவிதை

Shanthi said... 10/7/12 7:58 AM

உயிர் துடிக்கிறது
எதிரில் வருகிறாய்
nice lines

தொடுவானம் said... 14/7/12 5:06 AM

super

புலவர் சா இராமாநுசம் said... 13/8/12 8:42 AM



கவிதை அருகையாக உள்ளது! வாழத்துக்கள்!

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto