7/7/12

ஏது செய்வீர் தமிழர்காள்?

|
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாதியும் திருப்பூர் மாவட்டத்தில்  பாதியுமாக விரவிக்கிடக்கும் ஊரது.திருப்பூரைப் பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் , தென்னைமரங்களும், கோழிப்பண்ணைகளும், விசைத்தறிகளும் சூழ அமைந்திருக்கும் அவ்வூரின் பெயர் பதின்மூன்றரை எழுத்துகளால் ஆனது.

காமநாயக்கன்பாளையம் என்பதை எவ்வாறு வாசிப்பீர்கள்?  கமநைக்கன்பலயாம் என்று யாரும் வாசித்தால்  பல்லிலோ நாக்கிலோ  எதுவும் சுளுக்கு என்றுதானே  நினைக்கத் தோன்றும்?

உலகப்பொதுமொழியாம் ஆங்கிலத்தின் அழகையும் வள‌மையையும் பயன்பாட்டு நன்மைகளையும் உணராமலும் , உணர்த்தாமலும் வலுக்கட்டாயமாக மொழியைத் திணிக்கும் கல்விக்கூடங்களுள் ஒன்றில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பொன்றில்  காமநாய்க்கன்பாளையம் என்று ஒலித்ததைத் திருத்திக் கமாநைக்கன்பலயாம் என்று ஸ்டைலாகச் சொல்லிக்கொடுத்த கொடுமையை அண்மையில் கேட்டறிந்தேன்.பெயர்ச்சொற்களை (இடம்,பெயர்....) எம்மொழியிலும்  இயல்பு மாறாமல்தான் ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படை கூடத் தெரியாததுகளிடம் இன்ரைய கல்வி சிக்கிக் கொண்டுள்ளதே என்று வெதும்புகிறது மனம்.நேசமணி பொன்னையாவை நாசமாநீ போனியா என்று வாசித்த  திரைக்காட்சி நினைவுக்கு வருகிறது.உலகத் தாய்மொழி தமிழே என்று நிறுவும் "சொற்பிறப்பியல் " என்ற நூலைப் படித்ததுப் பாருங்கள்.எவ்வளவு முரண் பட்ட நிலையில் நாமிருக்கிறோம் என்று தெரியும்.சுஜாதா ஒருமுறை சொன்னா" தனது பெயரை இந்திய ஊடகங்கள் ஒலிப்பதை மலேசியப் பிரதமர் ஒருமுறை கேட்டால் முதலீடுகளை நிறுத்தி விடுவார் " என்று .க.சீ.சிவகுமார் இலவச மின்சாரத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுவது போல கடுமையான வட்டார அறிவு இல்லாதவர்கள்  அவ்வாறு சொன்னாலும் ஏற்கலாம். அந்தப்பகுதியிலேயே இருந்து கொண்டு இவ்வாறு ஒலிப்பது பெருங்கூத்து.. இன்னும் எத்தனை ஊர்கள் காத்திருக்கின்றன‌வோ?
வாக்களிப்புப் பட்டைகள்

2 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

திண்டுக்கல் தனபாலன் said... 8/7/12 12:41 AM

நல்லதொரு பதிவு ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !

lakshmana said... 10/7/12 7:50 AM

good

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto