8/18/12

யாப்பருங்கலக்காரிகை - அவையடக்கம்

|


                                       அவையடக்கம்
சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர் முன் யான் மொழிந்த‌
பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமயப்
பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய்
இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே!

       அவையடக்கத்தை முன்னர்க் கண்டோம். இப்பாடலில் மீண்டும் அவையடக்கத்தை
வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
                                     பதவுரை
சுருக்கமில் -    அளவிலா
கேள்வி -    கேள்வியறிவு
துகள் -    குற்றம்
மொழிந்த -    கூறிய‌
பருப்பொருள் -    (சிறப்பற்ற) பிண்டப்பொருள்
விழுப்பொருள் -   சிறந்த பொருள்
மால் -    பெரிய‌
பொருப்பகம் -   மலை
இருநிலம் -   உலகம்
                                                 தெளிவுரை
   அளவிலாத கேள்வியறிவினையுடைய குற்றமற்ற புலவர்களின் முன்
நான் கூறிய இச்சிறப்பில்லாத பாடு பொருளும் பனிபடர்ந்த பெரிய இமயமலையை
அடைந்த இழிவான கரிய காக்கையும் பொன்னிறமாய்த் தெரிவது போல சிறந்த‌
நுண்பொருளாக இந்த உலகம் உரைக்கு மல்லவா.

                                                  கருத்துரை
 கரிய இழிவான காக்கையும் இமயமலையை அடைந்து பொன்னிறமாய்
ஒளிர்வது போல மதிநிறைந்த புலவர்கள் முன் எனது நூலும் சிறப்பாகி விடுகிறது.
என்று ஆசிரியர் அவையடக்கத்துடன் கூறுகிறார்.     
வாக்களிப்புப் பட்டைகள்

6 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

திண்டுக்கல் தனபாலன் said... 18/8/12 4:20 AM

தெளிவுரையும், கருத்துரையும் அருமை...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... 18/8/12 4:30 AM

நன்றி ஐயா

G.M Balasubramaniam said... 18/8/12 6:35 AM


பதவுரை, பொழிப்புரை, கருத்துரை இல்லையென்றால் படிப்பவர் பாடு திண்டாட்டம்தான். நன்றி.

AROUNA SELVAME said... 18/8/12 7:51 AM

அவையடக்கத்தை அழகாக விளக்கியுள்ளீர்கள்.
நன்றிங்க கவிஞரே.

கோவி said... 18/8/12 8:29 AM

அருமையான விளக்கம்..

Ramani said... 18/8/12 4:38 PM

அத்துணை பெரும் புலவரின் அவையடக்கம்
பிர்மிக்க வைக்கிறது தங்கள் விளக்கம்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto