8/19/12

சாய்னா நெஹ்வால்----வாழிய பல்லாண்டு..!

|

பொன்மகள் போற்றுதும் பொன்மகள் போற்றுதும்
வெண்கலம் வீரத்துடன் வென்று கொடுத்துநம்
பெண்குலம் சிறப்பித்த தால்.               (சிந்தியல் வெண்பா)

தங்கத்தைத் தவற விட்டாலென்ன...? வெண்கலம் வென்று வந்தவளே ஒரு தங்கமகள்தானே...?


                சாய்னா நெஹ்வால்
             (வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா)

விறகுதள்ளி யரிசியிட்டு விதியதன் மேல் பழிசுமத்திZ
இறகுகிள்ளிச் செவிகுடைந்த வழக்கமெலா மொழிந்ததுகாண்
இறகணிந்த சிறுபந்தா லிருபஃதே யகவைகொண்ட‌
திறம்மிகுந்த வொருமங்கை திசைபலவு முலவிவந்து
குவித்தவெற்றி யரும்பெண்ணைக் குலத்திற்கே பெருமையாம்
புவிப்பந்தில் நம்நாடும் பூண்டதுகாண் புதுவாகை
                                                                                             (தரவு)

ஆந்திரத்துத் தலைநகராம் ஐதராபாத் தினில்பிறந்து
தேர்ந்திறகுப் பந்தாட்டந் தினந்தோறும் பயிற்சிபெற்று
உலகளவில் பலபோட்டி கலந்துவெற்றி           வலம்வருஞ்சீர்
நலமிகுந்த விளஞ்சாய்னா நேவல்வா ழியநெடுநாள்!
அதிவிரைவில் முதலிடத்தைத் தரவரிசை   தருமெனலாம்
பதக்கங்கள் பலவள்ளிப் பட்டங்கள் பலசூடி
நம்மினிய நாட்டுக்குப் புகழ்சேர்க்கப் புறப்பட்ட‌
விம்முதிறஞ் சிறந்தவேள விளையாடு! புகழ்சூடு!!
கரமடைந்த வலைமட்டை களஞ்சுழலுங் கூர்வாளோ
உரம்படைத்த உளங்கொண்டு களவெற்றி குவிப்பாளோ
அணிகலனாய் நாட்டுக்கே ஆகிவிட்ட நேவாலோ
மணிமகுடந் தனையணிந்து மனதெல்லாம் நிறைவாளோ
                                                                                                          (தாழிசை)

கடல் மணல் நெடுமலை படரொலி விரிவெளி
கதிரொளி நிகரவள் புகழ்!
சுடர்மிகுந் தொளிர்ந்தடித் தினிதுள வலிமிகு
வளம்பெறு நறுந்திரு மகள்!
கடன்பணி பெருந்திறன் உளவளம் திடமனம்
விளைநில மவளதன் பொருள்!
நடம்புரி பவளென விழிகளில் விழுமவள்
திடலினற் சுழன்றொளிர் நிழல்!
                                                                                           (வண்ணகம்)

அடைந்தனர் பெருமை அளவிலாது பெற்றோர்
அடைந்தனர் அவளை மகளென வரமாய்
அவையத்து முந்தச் செய்தனரவர் நோற்றதென்ன
தவமெனவுல குவியப்பத் தந்தனள் மகள்  
                                                                                               (பேரெண்)

திறமையின் பிறப்பிடமாய்த் திகழ்கின்றவள் சாய்னாவே!
அமைதியி னிருப்பிடமாய் யமைந்தவளும் சாய்னாவே!
களத்தினில் கடுமையைக் காட்டுபவள் சாய்னாவே!
உறுதியி னுண்மை யுருவமும் சாய்னாவே!
                                                                                              (அளவெண்)

தூள்கிளப்பத் தினவெடுக்குந் தோள்
      துல்லியமாய்க் கணித்தெடுக்குங் கண்
வாள்சுழற்றும் வடிவத்துக் கை
      வரலாறு படைத்துவரு முளம்
நாள்கணக்கில் பயிற்சிபெறும் மெய்
      நாற்றிசையும் தரைபறக்குங் கால்.
கோள் பலவும் பறக்குமவள் கொடி
     கொட்டும்புக ழவளதுகா லடி
                                                                                        (இடையெண்)

                          திறனு மவள்
                                              தீரமவள்
                                                            திடனுமவள்
                          அறமு மவள்
                                              அருமை யவள்
                                                            அமைதி யவள்
                          செறிவு மவள்
                                              சீர்மையவள்
                                                            சிறப்பு மவள்
                         அறிவு மவள்
                                             ஆழ மவள்
                                                           ஆழியவள்
                                                                                          (சிற்றெண்)

     எனவே
                                                                                          (விட்டிசை)


சாய்னா நேவால் சாதித் தேமெய்
ஓய்ந்தா லும்புகழ் ஒழியா தென்று
கூறுவன் பெருமை யோடு
வேறுக ருத்தின் றியே!                                        (சுரிதகம்).


ஒரு தரவு , மூன்று தாழிசைகள், விட்டிசை, போக்கியல் என்பன வந்து முறையே பொருந்தி நிற்கும் நேரிசை யொத்தாழிசைக் கலிப்பாவே, நீரின் திரை போலும் முறை பொருந்தி வருகின்ற அளவடியாக நாற்சீரடி, நாற்சிரோரடி, முச்சீரடி . ஒருசீரடி (பேரெண்,அளவெண், இடையெண்,சிற்றெண்) யென்னும் அம்போதரங்கம் நடுவே மடுக்கப்படுமாயினஃது அம்போதரங்க வொத்தாழிசைக்   கலிப்பாவாகும்.அம்போதரங்க உறுப்பின் முன்னே வண்ணகம் என்னும் முடுகியல் வரப்பெற்ற மற்றைய தரவு, தாழிசை, கூன் அடக்கியல் என்னுமுறுப்புகளுமுளதாகப் பெறுமாயினது வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவாகும்.


வாக்களிப்புப் பட்டைகள்

8 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

Ramani said... 19/8/12 7:29 AM

பண்டிதராகவும் கவிஞராகவும் இருத்தல்
கடினமான பணியே
தங்களிடம் இரு சிறப்புகளும் நிறைவாக இருப்பதைக்
காண மிக்க மகிழ்ச்சி
தங்கள் பதிவுகளைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... 19/8/12 7:33 AM

நன்றி ஐயா

கிருபன் said... 19/8/12 7:40 AM
This comment has been removed by the author.
கிருபன் said... 19/8/12 7:42 AM

இந்த பாவுக்கு கருத்து சொல்லுமளவுக்கு எனக்கு தகுதியில்லைத்தான் இருந்தாலும் மிகவும் சிறப்பாக இருக்கிறது பாவலரே.....தொடர்ந்து பாடுங்கள்...

திண்டுக்கல் தனபாலன் said... 20/8/12 12:32 AM

சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் கவிதை சிறப்பு...

ரமணி சார் கருத்து மூலம் தகவல் அறிந்தேன்... நன்றி சார்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

AROUNA SELVAME said... 20/8/12 6:02 AM

ஐயா... வண்ணக வொத்தாழசைக் கலிப்பா அருமைங்க.
வாழ்த்துக்கள். நன்றி.

முதலில் இருக்கும் சிந்தியல் வெண்பாவின் ஈற்றடி தளை தட்டுகிறதே.. வகையொளி செய்து படிக்கவேண்டுமா..?

பார்வையாளன் said... 20/8/12 8:02 AM

very interesting and beautiful..

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... 23/8/12 10:42 AM


AROUNA SELVAME said... 20/8/12 6:02 AM

ஐயா... வண்ணக வொத்தாழசைக் கலிப்பா அருமைங்க.
வாழ்த்துக்கள். நன்றி.

முதலில் இருக்கும் சிந்தியல் வெண்பாவின் ஈற்றடி தளை தட்டுகிறதே.. வகையொளி செய்து படிக்கவேண்டுமா..?வகையுளி செய்து படிக்க வேண்டும்
பெண்குலஞ்சி றப்பித்த தால் என்று

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto