9/29/12

11

தூய தமிழ்ச்சொற்கள்

|

டக்கர் - அருமை
தங்கம் - பொன்
ஸ்வர்ணம் - பொன்
குரு - ஆசான், ஆசிரியர்
உல்லாசம்- களிப்பு


வலைப்பூக்களில் தூய தமிழைப் பயன்படுத்துவோம்
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

9/27/12

2

கோயம்புத்தூருக்கு மோனோ ரெயில்

|
தொழில், கல்வி,சுற்றுலா மற்றும் மருத்துவத்துறைகளில் கோலோச்சிவரும் கோயம்புத்தூர் மாநகரம் கட்டமைப்பு வசதிகளில் போக்குவரத்தைப் பொருத்தவரையில்  பெருகிவரும் மக்கள்தொகையைச் சமாளிக்க இயலாமல் திணறி வருகிறது. INDIAN TIER II CITIES பிரிவில் வரும் இருபது நகரங்களில் ஒன்றான கோவையில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவரிகிறார்கள்.. பேருந்து, ரெயில் விமானம் என இந்தியாவின் அனைத்துப்பகுதிகளுடனும் சிறப்பாக இணைக்கப்பட்டிருந்தாலும் மாநகரப்போக்குவரத்து நெருக்கடி என்பது நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

சத்தி சாலை, பொள்ளாச்சி சாலைப் போக்குவரத்து நெரிசலில் மாட்டினால்  விழிபிதுங்கிவிடும்..  இந்த இடையூறைத் தவிர்க்க   மோனோ ரெயில் திட்டம் உதவிகரமாக இருக்கும் .. மாநகராட்சிக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுமென நினைக்கிறேன்..TUFISIL ( Tamilnadu Urban Infrastructure Finanacial Service Limited)) எனப்படும் மாநில அமைப்பிற்கு இந்த வரைவு அனுப்பப்படும்.
in comparison
city                    urban area population       city limit population                     project status

KOCHI                     20 Lakh                           7.5 Lakh                    metro work under process

KOZHIKODE          19.5Lakh                          4.5  Lakh                  DPR prepared

THIRUVAN
ANTHAPURAM     15 Lakh                            8 Lakh                       project under study

COIMBATORE      21.5  Lakh                        10.5 Lakh                  feasibility study to be conducted.
                                                                                                         ( Courtesy : TOI )
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

9/25/12

7

சுடிதாரா...குர்தீஸா...?

|

இன்று
 வருவாயா மாட்டாயா...
சுடிதாரா..குர்தீஸா...
கொண்டையா..பின்னலா..
பஸ்ஸா....டூவீலரா...
பார்ப்பாயா...பார்க்கமாட்டாயா....
என்று பட்டிமன்றம் நடத்தியே
என் பகல்பொழுதுகள் கழிகின்றன...!


மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

9/24/12

7

மக்காயாலாவுக்கு மீனிங் தெரியுமா மக்களே....?

|
தற்செயலாகப் பார்க்க நேரிட்டதிரைப்படம் "நான்". போய் அமர்ந்த சிறிது நேரத்திலேயே அந்தப் பாடல் வந்தது.  மக்கயாலா.......ஒருமணி நேரம் மட்டும் நேரத்தைப் போக்க வந்த இடத்தில் மயக்கும் இசையும் , துள்ளும் அசைவுகளும், வசீகர வரிகளுமாக மக்கயாலா பாடல் மனதில் நச்சென்றுஅமர்ந்துகொண்டது..மக்கயாலாவுக்குப் பொருள் என்னவென்று தேடினேன்..பாடலாசிரியர் என்ன பொருளில் எழுதினார் என்று தெரியாது.ஆனால் மக்கயாலா என்பது MICHAELA  என்பதன் நவீன வடிவம் என்றும்  அழகான , எல்லாரையும் வசீகரிக்கக்கூடிய, நளினமான கூந்தலையுடைய,அழகான கண்களையுடைய இளம்பெண் என்றும் பொருள் கிடைத்தது......பொருள் தெரியாமல் மக்கள் போராடிக்கொண்டிருப்பார்களே என்ற்தேடலின் அடிப்படையில்  இந்தப் பதிவைத் தருகிறேன்.

 

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

9/23/12

5

அடடா...!

|

இல்லாத இடை , கொடியிடை, பனியிடை, மெல்லிடை  என இடையைத்தான் எத்தனை விதமாக வருணித்துள்ளனனர்....எனது பத்தாம் வகுப்புத் தமிழாசிரியர் கூறுவார்.. ஆனண்களின் இடை மத்தளம் போன்றும் பெண்களின் இடை உடுக்கை போன்றும் இருக்க வேண்டும் என்பார்.உடுக்கை என்பது மேலே விரிந்தும் ,இடையில் குறுகியும், பின் விரிந்தும் இருக்கும்.   

பற்றிக் கொண்டு நடக்க இடையைப்போல.... வேண்டாம்..சொந்தக்கதைகள்... நளவெண்பாவில்புலவர் புகழேந்தி சொல்வதைக் கேட்போம்....என்றும் நுடங்கும் இடையென்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே ‍ ஒன்றி
அறுகால் சிறுப‌றவை அஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து


தமயந்தியின் இடையானது, ஆறு சிறுகால்களையுடைய சிறிய வண்டானது  தனது மெல்லிய சிறகால் வீசும் காற்றுக்குக் கூட ஆற்றமாட்டாமல் துவண்டு விடும்   என்கிறார்...இதை இனியும் விளக்க வேண்டுமா...? குறளில்  
"அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை"   என்பார் வள்ளுவர்..காம்பைக் கிள்ளாமல் பூச்சூடியவளின் இடை பாரம் தாங்காமல் முறிந்து விழும் ஒலியைக் கூறுகிறார் வள்ளுவர்.

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

9/20/12

12

காதல் ரேகை

|

ஒரே ஒருமுறை
என்னுடன்
கைகுலுக்கிக்கொள்..!
என் 
கைரேகை எல்லாம்
காதல் ரேகை ஆகிவிடட்டும்...!!
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

9/15/12

5

ம்ம்ம்ம்ம்ம்....

|
டூ வீலரில் என்னை
மிதவேகத்தில்
கடந்து செல்கிறாய்!
என் மனதோ ராக்கெட் போல்
அதிவேகத்தில்
துரத்துகிறது உன்னை!
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

9/14/12

5

கொளுத்திப் போடுவொம்

|
பிழையில்லாத் தமிழையும், தூய தமிழையும் வலியுறுத்தி நாம் தொடர்ந்து பதிந்து வருவதில் பலரும் நம்மிடம் கேட்கும் கேள்வி இது. உங்கள் பெயரில் வரும் வடமொழி எழுத்துகளையும், எஸ் என்ற தலைப்பெழுத்தையும் ஏன் மாற்றவில்லை?சற்று விளக்கமாகக் காண்போம்.தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை என்று கேட்டால் 247 என்போம். இக்கூற்று சரிதானா என்று பார்த்தால்  தமிழ் எழுத்துகளை இலக்கணிகள் முதல் மற்றும் சார்பெழுத்துகள் என இருவகையாகப் பிரிக்கின்றனர்.முதல் எழுத்துகள் மெய்யும் உயிருமாக முப்பதும்,சார்பெழுத்துகள் பத்துமாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றுள் ஸ, போன்ற ஒலிக்குறிப்புகளுக்கு வரிவடிவம் இல்லை எனினும் அவற்றின் ஒலிவடிவம் புழங்கியே வருகிறது.காகம் என்பது காம் என்றே ஒலிக்கப்படுகிறது.பசை என்பது பஸை என்றே ஒலிக்கிறது.எனினும் பெயர்ச்சொற்களை நாம் கையாள்கை யில் கிரந்த எழுத்துகளான வடமொழி எழுத்துகள் தேவைப்படவே செய்கின்றன.ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று கூறுவது நெருடத்தான் செய்கிறது. அதேபோல ஆவணப்படுத்தப்பட்ட சொற்களான எஸ்.குமாரபாளையம் போன்றவற்றில் நாம் அதை எவ்வாறு தவிர்ப்பது எனத் தெரியவில்லை...!கவிப்பேரரசு கார் போன்ற ஆங்கிலச்ச் சொற்களை எழுத்திலக்கணத்துக்குட்பட்டுத் தமிழ்ழ்சொல்லாகவே கருதலாம் என்கிறார்.ஆனால் பெயர்ச்சொற்கள்,BRANDED NAMES , ஆவணப்படுத்தப்ப்ட்ட பெயர்ச்சொற்கள் (பெயர்ச்சொற்களில் இடம் ,பெயர், காலம்முதலியன அடங்கும்) ஆகியவற்றின் ஒலிப்பை மாற்ற வேண்டாம் என எண்ணுகிறேன்.தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பதும் சொற்றொடர் அமைப்பதில் பிழைகளைத் தவிர்ப்பதும் தேவைப்படும் அதே நேரத்தில் ழ கர ஒலிப்பு இல்லாத பிறமொழிகளில் "தமிழை"  தமில் என்னும்போது எவ்வளவு அருவெறுப்பாக இருக்கிறதோ அதேபோலக்தான் ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்பதும்...தமிழுலகம் என்ன சொல்லப்போகிறதோ....? ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

4

கோயம்புத்தூரில் ஏர் டாக்ஸி அறிமுகம்

|
தொழில், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் கோவைக்கு இப்பொழுது ஏர்டாக்ஸி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்புசென்னையில் மட்டும்  இந்த வசதி இருந்தது.கோவையில் இருந்து சென்னைக்கு எட்டுப் பேர் செல்ல 4 லட்சம் கட்டணமாகக் கூறப்பட்டுள்ளது.சென்னை மற்றும் பெங்களூருவில் ஒரு மணி நேரத்துக்கு 2,25,000 ரூபாய் கட்டணம் ஆகிறது. கோவையில் அறிமுகக் கட்டணமாக இரண்டு லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த SANWE Air நிறுவனம் இந்த வசதியைக் கோவையில் அறிமுகப்படுத்துகிறது.இனி கோவையில் இருந்து இந்தியாவின்  எந்த ஊருக்கும்  ஏர்டாக்ஸி மூலம் செல்ல முடியும்.
நீலகிரி, கோயம்புத்தூர்,  மற்றும் திருப்பூர்ப் பகுதியில் உள்ள சுற்றுலா, கல்வி, டெக்ஸ்டைல், மருத்துவம் மற்றும் இயந்திரத் துறையினர் இதன் மூலம் பெரும்பயன் அடைவர் என்று நிறுவனத்தின் பொது மேலாளர் கூறுகிறார்.  

நன்றி: டைம்ஸ் ஆஃப் இண்டியா, கோவைப் பதிப்பு
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

9/6/12

7

வெப்ப வரிகள்

|

கவ்விச் சுவைத்த உன்
கரும்பிதழ்களுக்கிடையே
அள்ளிக் குடித்த
அமுதமென்ன
பாலும் தேனும் கலந்த
படையலா காதல் தேவதையே..?
சொல்வாய்...என்
சுடர் மிகு  பூவழகே...!


அனல் பறக்கிறதா வரிகளில்... வெப்பமாகாமல் என்ன செய்யும்..? கவிதை  சுடப்பட்டதாச்சே...  திருவள்ளுவர் எழுதிய குறள் இது...

பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி
வாலெயி  றூறிய  நீர்  .


 காதற்சிறப்புரைத்தல்  என்னும் அதிகாரத்தில் வரும் 1121 ஆவது குறட்பாவிது..... வள்ளுவர் முன் நாமெல்லாம் ....சும்மா....!
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

3

ஆசெதுகை-கவிஞர்களுக்காக ஓரிடுகை

|
தொடைகளுள் எதுகை என்பது செய்யுளுக்கு இனிமை சேர்க்கும் அழகுப் பொருளாம். இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை ஆகும்.

எ‍‍கா: "மதியும் மடந்தை முகனும் அறியா

              பதியிற் கலங்கிய மீன்"                                                       (திருக்குறள்)

 இங்கு மதி, பதி என்பவை எதுகைச்சொற்கள். ஆசெதுகை என்பது என்ன? ஆசு என்ற பதத்துக்குப் பற்று, பொடி எனப் பொருள் கொள்ளலாம். 

பொன் மற்றும்வெள்ளி நகை செய்பவர்கள் கம்பி,மற்றும் தகடுகளைப் பொடி வைத்து ஊதி இணைப்பர்.
அதனைப் போல எதுகை யெழுத்தையும், முதலெழுத்தையும் இணைக்கும் வகையில் இடையில் வரும் எழுத்தை ஆசென்று கூறி இவ்வகையை  ஆசெதுகை என்பர்.

 சான்று:

     "ஒத்துயர் கானவன் கிரியி னோங்கிய

      மெத்துறு மரந்தொறு மின்மி னிக்குலம்

      மொய்த்துள வாமென முன்னும் பின்னரும்

      தொத்தின தாரகை மயிரின் சுற்றெலாம்"

                                                                                         -  கம்பராமாயணம்.

        ஒத்துயர்

        மெத்துறு

        மொயித்துள

        தொத்தின       

  என்பனவற்றுள் மூன்றாம் அடியில் எதுகை எழுத்தான‌ 'த்' என்பதற்கும்

 முதலெழுத்துக்கும் இடையில் 'ய்' வந்து இஃது ஆசெதுகை ஆயிற்று.

இதனை யகர வொற்றாசிடை எதுகை என்பர்.

          ஈரொற்றும் உடன் மயங்கக்கூடிய ய்,ர்,ழ் என்பன வல்லின மெய்களான க்,ச்,த்,ப் என்பனவுடன் ஆசெ
துகையாக வருவது போல் 'ல்' என்பது

     "ஆவே றுருவின் வாயினும் ஆபயந்த

       பால்வே றுருவின வல்லவாம்"

என்று ஆசெதுகை யாகும்.
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

9/4/12

2

தமிழறிவோம்

|
தூய தமிழ்ச்சொற்களை வலைப்பூக்களில் பயன்படுத்துவோம்!சுயநலம்- தன்னலம்
ரசம் - சாறு, சுவை
மாமிசம், மாம்சம்- இறைச்சி, கறி,உடல்,ஊன்,சதை,தசை,புலால்
பிரதிபலிப்பு - எதிரொளி
பிரமாதம் - அருமை
ஜாமீன் - பிணை
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto