9/23/12

அடடா...!

|

இல்லாத இடை , கொடியிடை, பனியிடை, மெல்லிடை  என இடையைத்தான் எத்தனை விதமாக வருணித்துள்ளனனர்....எனது பத்தாம் வகுப்புத் தமிழாசிரியர் கூறுவார்.. ஆனண்களின் இடை மத்தளம் போன்றும் பெண்களின் இடை உடுக்கை போன்றும் இருக்க வேண்டும் என்பார்.உடுக்கை என்பது மேலே விரிந்தும் ,இடையில் குறுகியும், பின் விரிந்தும் இருக்கும்.   

பற்றிக் கொண்டு நடக்க இடையைப்போல.... வேண்டாம்..சொந்தக்கதைகள்... நளவெண்பாவில்புலவர் புகழேந்தி சொல்வதைக் கேட்போம்....



என்றும் நுடங்கும் இடையென்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே ‍ ஒன்றி
அறுகால் சிறுப‌றவை அஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து


தமயந்தியின் இடையானது, ஆறு சிறுகால்களையுடைய சிறிய வண்டானது  தனது மெல்லிய சிறகால் வீசும் காற்றுக்குக் கூட ஆற்றமாட்டாமல் துவண்டு விடும்   என்கிறார்...இதை இனியும் விளக்க வேண்டுமா...? குறளில்  
"அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை"   என்பார் வள்ளுவர்..காம்பைக் கிள்ளாமல் பூச்சூடியவளின் இடை பாரம் தாங்காமல் முறிந்து விழும் ஒலியைக் கூறுகிறார் வள்ளுவர்.

வாக்களிப்புப் பட்டைகள்

5 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

முனைவர்.இரா.குணசீலன் said... 23/9/12 2:25 AM

இலக்கிய நயம் உணர்ந்தேன் நண்பா.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... 23/9/12 2:32 AM

வருகைக்கு நன்றி நண்பரே

Ramani said... 23/9/12 7:14 AM

அடடா..
இதுவரை அறியாத அருமையான பாடலை
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

அருணா செல்வம் said... 23/9/12 11:44 AM


அழகான பாடலுக்கு அருமையான விளக்கத்துடன் பதிவு.
சூப்பர்! தொடருங்கள் கவிஞரே.




திண்டுக்கல் தனபாலன் said... 24/9/12 1:07 AM

ரொம்ப டேஞ்சரான இடம் ஆச்சே... ஹா ஹா....

நளவெண்பாவையும் திருக்குறளையும் இணைத்தது சிறப்பு...

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto