9/6/12

வெப்ப வரிகள்

|

கவ்விச் சுவைத்த உன்
கரும்பிதழ்களுக்கிடையே
அள்ளிக் குடித்த
அமுதமென்ன
பாலும் தேனும் கலந்த
படையலா காதல் தேவதையே..?
சொல்வாய்...என்
சுடர் மிகு  பூவழகே...!


அனல் பறக்கிறதா வரிகளில்... வெப்பமாகாமல் என்ன செய்யும்..? கவிதை  சுடப்பட்டதாச்சே...  திருவள்ளுவர் எழுதிய குறள் இது...

பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி
வாலெயி  றூறிய  நீர்  .


 காதற்சிறப்புரைத்தல்  என்னும் அதிகாரத்தில் வரும் 1121 ஆவது குறட்பாவிது..... வள்ளுவர் முன் நாமெல்லாம் ....சும்மா....!
வாக்களிப்புப் பட்டைகள்

7 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

அன்பை தேடி,,அன்பு said... 6/9/12 7:19 AM

நண்பரே உங்களது தளம் திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கிறது.உங்களது தளத்தின் templeate மாற்றி பார்க்கலாமே

குட்டன் said... 6/9/12 7:30 AM

குறள் கருத்தில் எழுதிய கவிதை,பாலொடு தேன் கலந்தது போல் இருக்கிறது

திண்டுக்கல் தனபாலன் said... 6/9/12 8:02 AM

சார்... அவர் கில்லாடி... இன்னும் பல குறள்கள், இதை விட அனல் பறக்கும்... அதனால் தான் முடிவில் வைத்தார்...

AROUNA SELVAME said... 6/9/12 1:33 PM

நீங்கள் ரொம்பத்தான் விளக்கியிருக்கிறீர்கள்....

அனலால் உங்களின் வலை கூட சீக்கிரம் திறக்க மாட்டேங்கிறது நண்பரே.

குட்டன் said... 7/9/12 4:13 AM

இன்று என் வலைப்பூவில் “சாமி எங்கே வரும்?-மீண்டும் ஒரு கவிதை
வந்து பார்த்துக் கருத்துச் சொல்லுங்களேன்!
மறக்காம ஓட்டும்!
http://kuttikkunjan.blogspot.in/2012/09/blog-post_7.html

அருண்பிரசாத் வரிக்குதிரை said... 7/9/12 6:30 AM

அருைம,,,
லொட் ஆக நேரம் அதிகம் நண்பா.... எனது தளத்தயும் வந்து பார்த்து இணையுங்களேன்.
varikudhirai.blogspot.com

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said... 8/9/12 4:56 PM

வணக்கம்

சுடா்மிகு பூவே என்று
சூட்டிய கவிதை கண்டேன்!
உடல்மிகு சூட்டைக் காதல்
உயிர்மிகும் வண்ணம் தந்தீா்!
இடா்மிகு வாழ்வைப் போக்கும்
இதழ்மிகும் இன்றேன்! சோலை
மடல்மிகும் மணத்தை உன்றன்
வலைமிகும் என்பேன்! வாழ்க!

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto