9/14/12

கொளுத்திப் போடுவொம்

|
பிழையில்லாத் தமிழையும், தூய தமிழையும் வலியுறுத்தி நாம் தொடர்ந்து பதிந்து வருவதில் பலரும் நம்மிடம் கேட்கும் கேள்வி இது. உங்கள் பெயரில் வரும் வடமொழி எழுத்துகளையும், எஸ் என்ற தலைப்பெழுத்தையும் ஏன் மாற்றவில்லை?சற்று விளக்கமாகக் காண்போம்.தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை என்று கேட்டால் 247 என்போம். இக்கூற்று சரிதானா என்று பார்த்தால்  தமிழ் எழுத்துகளை இலக்கணிகள் முதல் மற்றும் சார்பெழுத்துகள் என இருவகையாகப் பிரிக்கின்றனர்.முதல் எழுத்துகள் மெய்யும் உயிருமாக முப்பதும்,சார்பெழுத்துகள் பத்துமாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றுள் ஸ, போன்ற ஒலிக்குறிப்புகளுக்கு வரிவடிவம் இல்லை எனினும் அவற்றின் ஒலிவடிவம் புழங்கியே வருகிறது.காகம் என்பது காம் என்றே ஒலிக்கப்படுகிறது.பசை என்பது பஸை என்றே ஒலிக்கிறது.எனினும் பெயர்ச்சொற்களை நாம் கையாள்கை யில் கிரந்த எழுத்துகளான வடமொழி எழுத்துகள் தேவைப்படவே செய்கின்றன.ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று கூறுவது நெருடத்தான் செய்கிறது. அதேபோல ஆவணப்படுத்தப்பட்ட சொற்களான எஸ்.குமாரபாளையம் போன்றவற்றில் நாம் அதை எவ்வாறு தவிர்ப்பது எனத் தெரியவில்லை...!கவிப்பேரரசு கார் போன்ற ஆங்கிலச்ச் சொற்களை எழுத்திலக்கணத்துக்குட்பட்டுத் தமிழ்ழ்சொல்லாகவே கருதலாம் என்கிறார்.ஆனால் பெயர்ச்சொற்கள்,BRANDED NAMES , ஆவணப்படுத்தப்ப்ட்ட பெயர்ச்சொற்கள் (பெயர்ச்சொற்களில் இடம் ,பெயர், காலம்முதலியன அடங்கும்) ஆகியவற்றின் ஒலிப்பை மாற்ற வேண்டாம் என எண்ணுகிறேன்.தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பதும் சொற்றொடர் அமைப்பதில் பிழைகளைத் தவிர்ப்பதும் தேவைப்படும் அதே நேரத்தில் ழ கர ஒலிப்பு இல்லாத பிறமொழிகளில் "தமிழை"  தமில் என்னும்போது எவ்வளவு அருவெறுப்பாக இருக்கிறதோ அதேபோலக்தான் ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்பதும்...தமிழுலகம் என்ன சொல்லப்போகிறதோ....? ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
வாக்களிப்புப் பட்டைகள்

5 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

திண்டுக்கல் தனபாலன் said... 14/9/12 8:59 AM

இந்தளவு யோசிப்பதே பெரிய விஷயம்...? விசயம்...? விடயம்...?

AROUNA SELVAME said... 14/9/12 2:16 PM

நல்ல கேள்வி தான் நண்பரே....

எனக்கு தெரிந்த வகையில் தமிழுக்குச் சொந்தமான வார்த்தைகளைத் தமிழிலே உபயோகித்து மற்ற நாட்டினர் அவர் நாட்டின் உட்பொருளை (ஆதாவது உதாரணத்திற்கு “கெச்சப்“ என்று வைத்துக்
கொள்வோம்.) அவர்களின் வார்த்தையாகவே உபயோகித்தால் நன்றாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.

சேக்ஸ்பியர் பாவம் தான்...

(ஆமாம்... கொளுத்திப் போடுவோமா...? கொளுத்திப் போடுவொம்மா....?

Anonymous said... 14/9/12 5:44 PM

தவறோ சரியோ முதலில் எல்லோரையும் தமிழில் எழுத படிக்க வைக்க வேண்டும். இன்றைய சூழலில் விரைவில் அது ஒரு சவாலாக மாறப்போகிறது.

G.M Balasubramaniam said... 15/9/12 3:59 AM


சில நேரங்களில் எது தமிழ் என்றே தெரியாமல் போகிறது பேசுதமிழில் உச்சரிப்புகளும் வட்டாரச் சுவையும் மையமாய்க் கலந்து வரும்போது பொருள் புரிவதே கடினமான விஷயம் ( விடயம்...? )தமிழின் நடையும் அழகும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. மாற்றம் வேண்டாமா என்பதுதான் கேள்வியாக இருக்கவேண்டும்.

Reena Rajini dsoza said... 15/9/12 4:24 AM

அய்யோ எப்படி எல்லாம் யோசிக்கிறீர் ...

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto